Categories: அரசியல்

முதல்வருடைய பேச்சுக்கு ’நோ கமெண்ட்ஸ்’ கூறியுள்ளார் ரஜினிகாந்த்!!

வெளியிட்டது
முதல்வருடைய பேச்சுக்கு ’நோ கமெண்ட்ஸ்’ கூறியுள்ளார் ரஜினிகாந்த்!! 1

தமிழ்நாட்டில் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் தற்போது இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில் அவரது கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ராஜ் கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், அங்கு இயக்குநர் கே.பாலச்சந்திரின் மார்பளவு சிலையை நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிய போது ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருக்கிறது என்றார். பேட்டி கொடுத்த சில நிமிடங்களில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியின் பேச்சுக்கு விமர்சனங்கள் கொடுக்க தொடங்கினர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டியில் அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்றார்.முதல்வரின் இந்தப் பேச்சு குறித்து விமானநிலையத்தில் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது. பதில் கூற விரும்பவில்லை என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்