Categories: சினிமா

ஆயுத பூஜைக்கு வருகிறது ரஜினியின் அடுத்த படம்!

வெளியிட்டது
ஆயுத பூஜைக்கு வருகிறது ரஜினியின் அடுத்த படம்! 1

பொங்கலுக்கு திரைக்கு வரும் ரஜினியின் தர்பார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயர் இன்னும் வைக்கவில்லை என்பதால் இது ரஜினிக்கு 168-வது படம் என்று வழக்கத்தில் வைத்துள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள குடும்ப படமாக தயாராவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளார்கள். முத்து படத்துக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் மீனா இனைந்து நடிக்கிறார். ரஜினி 2 பெண்டாட்டிகாரராக நடிப்பதாகவும் குஷ்பு, மீனா இருவரும் மனைவிகளாக வருகிறார்கள் என்றும் பேச்சு அடிபட்டது. குஷ்பு இதில் வில்லியாக வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்தி பரவி வருகிறது. பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அடுத்து புனேயில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

மேலும், ரஜினியின் 168 வது படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது படத்தை ஆயுத பூஜையில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில் நுட்ப பணிகள் செப்டம்பர் மாதத்துக்கு முன்பே முடிந்து விடும் என்பதால் தீபாவளிக்கு முன்னதாகவே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்