ஆடி வெள்ளியில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற ராஜ்கமல், லதாராவ்.! அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

சின்னத்திரையில் மக்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜ்கமல் மற்றும் லதா ராவ் இருவரும் இன்றைக்கு ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருச்சியில் உள்ள புனித தலங்களில் ஆன்மீக சுற்றுலா சென்றிருக்கின்றனர்.

ஆடி வெள்ளியில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற ராஜ்கமல், லதாராவ்.! அழகிய புகைப்படங்கள்.! 1

அந்தப் புகைப்படங்களை தற்போது இருவரும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். ஒரு காலத்தில் சின்ன திரையில் கொடி கட்டி பறந்த ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் ராஜ்கமல் மற்றும் லதாராவ்.

கே பாலச்சந்தர் இயற்றிய சஹானா என்கிற சீரியலின் மூலமாக தமிழ் திரையில் அறிமுகமானார். பின்னர் 2006 ஆம் ஆண்டு வெளியான ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்கள் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும் இருக்கின்றனர். ராஜ்கமல் லிங்கா, சண்டிக் குதிரை, நவீன சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.


பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும் சீரியலில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். இவரது மனைவி லதாராவும் மெட்டி ஒலி, திருமதி செல்வம் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

மேலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்திலும் வடிவேலுவின் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்.


திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர்கள் இருவரும் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருச்சியில் உள்ள திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை உள்ளிட்ட திருத்தலங்களுக்கு தனது மகள்களுடன் சென்று அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த ஆடிப்பெருக்கில் உங்கள் செல்வம், அன்பு, பாசம் எல்லாம் பெருக திருச்சி திருவானைக்கோவிலில் பிரார்த்தனை என்று அவர்கள் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்