Categories: சினிமா

4 மாசமா பொண்ண தேடாம என்ன பண்ணிட்டு இருந்தீங்க? சரமாரியாக கேட்ட நெட்டிசன்கள்… பதிலடி கொடுத்த ராஜ் கிரண்

வெளியிட்டது

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள செய்தி தான் நடிகர் ராஜ்கிரணின் மகள் சின்னத்திரை நடிகர் ஒருவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டது. இந்த தகவல் தீயாய் பரவியதையடுத்து ராஜ்கிரண் காட்டமான விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். ராஜ்கிரணின் மகளாக அறியப்பட்ட ஜீனத் பிரியா ‘நாதஸ்வரம்’ நாடகத்தில் நடித்த முனீஸ் ராஜா என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்திருந்த அவர்கள், அது நிறைவேறாது என்று தெரிந்ததால், ஓடிப்போய் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ராஜ்கிரண் தனது சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

4 மாசமா பொண்ண தேடாம என்ன பண்ணிட்டு இருந்தீங்க? சரமாரியாக கேட்ட நெட்டிசன்கள்... பதிலடி கொடுத்த ராஜ் கிரண் 1

ஜீனத் பிரியா தன்னுடைய மகளே அல்ல, இந்து குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை நான் வளர்த்து வந்தேன். அது என்னுடைய வளர்ப்பு மகள் என்று தெரிந்தால் அவர் மனது கஷ்டப்படுமே என்று சொல்லி, தன் மகள் போல் வளர்த்து வந்தேன். ஆனால் பணத்திற்காக ஆசைப்பட்ட அந்த சின்னத்திரை நடிகர், என் மகளின் மனதை மாற்றி அவரை திருமணம் செய்து கொண்டு விட்டார். எனக்கும் அந்த பெண்ணிற்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது. நான் சாதி மதங்கள் பார்ப்பது கிடையாது, ஆனால் பணத்திற்காகவும், என் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் அந்த ஈனப்பிறவி எந்த காலத்திலும் என்னுடைய மருமகன் ஆக முடியாது என்று காட்டமாக விமர்சித்து பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவு வெளியானது முதல் பல விமர்சனங்கள் எழுந்து வந்தது.

அவரின் அந்தப் பதிவிற்கு கீழே சென்று ரசிகர் ஒருவர் நான்கு மாதங்களாக நீங்கள் தேடவும் இல்லை போலீசில் புகார் அளிக்கவில்லை ஏன் என்று கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பொறுமையாக பதில் அளித்துள்ள ராஜ்கிரண் நான்கு மாதங்களில் நடந்தவற்றையெல்லாம் விரிவாக பதிவிட்டால் படிப்பவர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு சொல்ல வந்த கருத்து போய் சேராமல் போய்விடும் தம்பி என்று பதிவிட்டு உள்ளார். மேலும் தான் எவ்வளவு மன்றாடியும் கேட்காமல் அந்தப் பையனுடன் போன அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Thanthi Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்