“கொல்லிமலையில் வசியம்.! ர த் த வாந்தி எடுக்கும் அளவிற்கு அடி உதை” ராஜ்கிரண் வேதனை பேட்டி.!

வெளியிட்டது

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா கடந்த 2022ம் ஆண்டு நாதஸ்வரம் சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணத்தை ராஜ்கிரண் கடுமையாக எதிர்த்தார். “தனது கணவரை பிரிந்து விட்டதாகவும், தன்னை வளர்த்த தந்தை ராஜ்கிரணை மிக காயப்படுத்தி விட்டதாகவும், எங்களது திருமணம் சட்டபூர்வமானது இல்லை என்றும், என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என்று சில நாட்களுக்கு முன்பு கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார் ஜீனத் பிரியா. இந்த வீடியோவிற்கு பதிலளித்திருந்த முனீஸ் ராஜா, “இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும். என் மனைவியை கட்டாயப்படுத்தி_ சதி செய்து என்னிடமிருந்து பிரித்து விட்டனர்” என்று பேசி இருந்தார்.

"கொல்லிமலையில் வசியம்.! ர த் த வாந்தி எடுக்கும் அளவிற்கு அடி உதை" ராஜ்கிரண் வேதனை பேட்டி.! 1
நிலைமை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வந்த நிலையில், தற்போது ராஜ்கிரண் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்க்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், “முனீஸ் ராஜா குறித்து பல அதிர்ச்சி தகவல்களை கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, “பணக்கார குடும்பங்களை குறிவைத்து பணம் பார்ப்பதுதான் முனீஸ் ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாரின் வேலை, கொல்லிமலை பக்கம் வசியம் செய்த மருந்தை வாங்கி வந்து, சம்பந்தப்பட்ட பெண்களை சாப்பிட வைத்து அவர்கள் சொல்வதை கேட்க வைத்து பணம் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோல ஏழெட்டு பெண்களிடம் அந்த குடும்பம் பணம் பறித்து இருக்கிறது. இதையே வேலையாக வைத்துள்ளார்கள்.

இதெல்லாம் தெரியாமல் என் மகளும் போய் மாட்டிக் கொண்டார். முனீஸ் ராஜாவை என் மகள் பிரிந்து ஐந்து மாதம் ஆகிவிட்டது. தற்போது நான் தான் பிரியாவை தனியாக வீடு எடுத்து தங்க வைத்து பார்த்துக் கொள்கிறேன். என் மகளுடன் வாழ நினைப்பவன் ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். தினமும் பணம் வாங்கிட்டு வா என்று டார்ச்சர் செய்து அடித்து உதைத்திருக்கிறான். தினமும் குடித்துவிட்டு அடிப்பது, கொடுமை செய்வது என்று இருந்துள்ளான். அவன் குடும்பமும் இதற்கு உடந்தை. தினமும் குடித்துவிட்டு அந்த அடித்ததால் என் மகள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு இரத்த வாந்தி எடுக்கும் அளவிற்கு சித்திரவதை அனுபவித்துள்ளார்.


இந்த விஷயம் முதலில் எனக்கு தெரியாது. பின்னர் வேறு ஒருவர் மூலம் தெரியவர ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தேன். மீண்டும் முனீஸ் ராஜா எனது மகளுடன் வாழ முயற்சி செய்து பேசியிருக்கிறார். ஏற்கனவே நிறைய திருமணம் செய்துள்ளான். தற்போது என் மகள் மனரீதியாக பாதிப்பில் இருக்கிறார். முனீஸ் ராஜா பற்றிய அனைத்து விஷயங்களும் என் மகளுக்கு தெரிய வர அவர் அவனிடமிருந்து பிரிந்து வந்துவிட்டார். தற்போது பிரிவு குறித்து தெளிவாக பதிலும் அளித்து விட்டார்” என்று ராஜ்கிரன் பேட்டி அளித்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்