விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் விஜே ரக்ஷன் நடித்துள்ள ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் ரக்ஷன். தனது எதார்த்தமான பேச்சாலும், காமெடி திறமையாலும் இவர் பல ஆண்டுகளாக மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். குறிப்பாக இவர் ‘கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ஜாக்குலினுடன் இணைந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை 3 சீசன்களாக தொகுத்து வழங்கியதன் மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவராகப் மாறிப்போனார் ரக்ஷன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. துல்கர் சல்மான் உடன் இணைந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகுக்கு நடிகராக அறிமுகமாகியிருந்தார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. தற்போது இவர் ரா.கோ. யோகேந்திரன் இயக்கத்தில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சச்சின் வாரியர் இசையமைத்திருக்கிறார். பள்ளிக் காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில், யூடியூப் பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் ரக்ஷனுடன் இணைந்து விஜய் டிவி பிரபலம் தீனா, மலினா, பிராங்ஸ்டர் ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீங்களும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Think Music India