Categories: சினிமா

மகளுக்கு எளிமையாக பெயர் சூட்டு விழா நடத்திய ராம் சரண்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த புகைப்படங்களை ராம்சரண் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது. தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவியின் மகன் தான் ராம்சரண். மாவீரன் என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். கட்டுக்கோப்பான உடலாலும், திறமையான நடிப்பாலும் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகிலும் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் போலீசாக நடித்து பலரின் உள்ளங்களை கவர்ந்திருந்தார். இவருக்கும் தொழில் முனைவராக இருக்கும் உபாசனாவிற்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி 11 ஆண்டுகள் குறித்தும் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது.

மகளுக்கு எளிமையாக பெயர் சூட்டு விழா நடத்திய ராம் சரண்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 1

ராம் சரணின் மனைவி பதினோரு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது குறித்து பலர் தன்னிடம் கேள்வி எழுப்புவதாகவும், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஜக்கி வாசுதேவிடம் விளக்கம் கேட்டிருந்தார். அந்த செய்தி பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து அவர்கள் பெண் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆகியிருக்கின்றனர். அந்த புகைப்படங்களையம் மகிழ்ச்சியான செய்தியையும் சமீபத்தில் உபாசனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். தற்போது ராம் சரணின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா இன்று நடைபெற்றிருக்கிறது. குழந்தைக்கு கிளின் காரா கோனிடெல்லா(Klin Kaara Konidela) என்று பெயர் சூட்டி இருக்கின்றனர். அந்த அறிவிப்பையும் பெயர் சூட்டு விழா நடந்த புகைப்படங்களிலும் தொட்டிலில் குழந்தை இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது. இன்று காலை முதலே ராம்சரண் மகளுக்கு அம்பானி விலை உயர்ந்த பரிசு ஒன்றை கொடுத்ததாக செய்திகள் வெளியானது.

அதில் அம்பானி ராம்சரனுக்கு பிறந்த குழந்தைக்கு தங்க தொட்டில் ஒன்றை பரிசாக கொடுத்து இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றும், வதந்தி கிளப்பப்பட்டு இருப்பதாகவும் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ராம் சரண் மகளுக்கு பெயர் சூட்டு விழா புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ராம்சரண் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்திருப்பதால், சிரஞ்சீவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்களும் கமெண்ட்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்