பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த ராம் ராமசாமி.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6ல் இருந்து வெளியேறிய பின்னர் முதன்முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார் ராம் ராமசாமி. அவர் அந்த வீடியோவில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் தொடங்கி இன்று வரை 66 நாட்களை நிறைவு அடைந்திருக்கிறது. இன்னும் 35 நாட்களே மீதம் உள்ள நிலையில் 11 போட்டியாளர்களுடன் இந்த சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து சீசன்களைப் போல் அல்லாமல் இந்த சீசன் சிறிது வித்தியாசமானது. ஐந்து சீசன்களிலும் 16 நபர்களை கொண்டு மட்டுமே நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதிகபட்சமாக 21 போட்டியாளர்களைக் கொண்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் லைவ்வாக பார்க்கும் விதத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்து வருகிறது விஜய் டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த ராம் ராமசாமி.! 1
தற்போது வரை 10 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அதில் சிலரின் எலிமினேஷன் எதிர்பாராத விதமாக இருந்தது. சுவாரஸ்யம் இல்லாத பல போட்டியாளர்களை பிக்பாஸ் வெளியே அனுப்பிவிட்டது. அந்த வகையில் முதலில் ஜிபி முத்து தானாக வெளியேறிவிட, இரண்டாவதாக சாந்தி மாஸ்டர், அடுத்தடுத்து அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம் என மொத்தம் பத்து போட்டியாளர்கள் இதுவரை வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த இரட்டை வெளியேற்றத்தில் ஆயிஷா மற்றும் ராம் இருவரையும் வெளியேற்றி இருந்தது. பிக்பாஸ்ஸில் இருந்து வெளியே வந்த பின்னர் முதன்முறையாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் ராம் ராமசாமி. அதில் பிக்பாஸ் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

அதிகபட்சமாக ஜெயிலில் இருந்த காரணத்தினால் அப்போது பூச்சி கடித்து தன்னுடைய இரண்டு கண்களும் அலர்ஜியாகிக் கொண்டே இருந்தது. அதனால்தான் தன்னால் முதல் மூன்று வாரங்கள் சரிவர விளையாட முடியவில்லை. ஆனால் நான் ரகுவரன் கதாபாத்திரத்தில் கடைசி வாரம் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது தன்னை வெளியேற்றியது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நானே பல நாட்களாக அது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் ஏடிகே, விக்ரமன், அசீம், ஜனனி, ஷிவின் என அனைவருமே அந்த வீட்டில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏடிகேயுடன் நான் வாழ்நாள் முழுவதும் நட்பை நீட்டிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என பேசி இருக்கிறார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண.! Watch the below video.!

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்