ரஜினி கமல் என இரு பெரும் துருவங்கள் தமிழ் திரையுலகில் கோலொச்சிக் கொண்டிருந்த காலம் அது. அப்போது சப்தமே இல்லாமல் தனது படங்களை வெள்ளி விழா கொண்டாடிய ஒரு நடிகர் என்றார் அது ராமராஜன் தான். 1986 ஆம் ஆண்டு “நம்ம ஊரு நல்ல ஊரு” என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், அம்மன் கோவில் வாசலிலே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். இதில் கங்கை அமரன் இயக்கத்தில் அவர் நடித்த கரகாட்டக்காரன் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் வரும் வாழைப்பழம் காமெடி தொடங்கி சொப்பன சுந்தரி காமெடி வரை இன்றளவும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமராஜன் தற்போது சாமானியன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அவருடன் ராதாரவி, எம்எஸ்.பாஸ்கர் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை எக்ஸ்டரா என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களை இயக்கிய ராகேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு ராமராஜன் கடைசியாக மேதை என்ற படத்தில் நடித்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாமானியன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என பான் இந்தியா மூவியாக ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமராஜன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
சாமானிய திரைப்படத்தில் ஹீரோயின் இல்லை, ஹீரோ மட்டும் தான். 20 படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்த ஒரே ஹீரோ நான் தான். அதற்கு காரணம் என்னுடைய ரசிகர்களும், ரசிகர் மன்றங்களும் தான். ஒரு விபத்தில் சிக்கியதால் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. தற்போது பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். இடையில் தனக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. கோலிசோடா 2, கரகாட்டக்காரன் 2 போன்ற இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைத்தார்கள். இரண்டாம் பாகத்தில் நடிப்பதில் எனக்கு பெரிய அளவில் விருப்பமில்லை. நான் மக்கள் நாயகன் மக்களுக்கு பயனுள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் தரங்கெட்ட படங்களில் நடிக்க மாட்டேன் என்று ராமராஜன் பேசினார்.
மேலும் தான் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று யாரோ கிளப்பி விட்டார்கள். நான் அப்படி சொல்லவே இல்லை. இருந்தாலும் நான் அமைதியாகவே இருந்தேன். 44 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளேன். இது தற்போது எனக்கு 45 வது திரைப்படம். நல்ல கதையோடு வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று ராமராஜன் பேசினார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண… Watch the below Video..