Categories: சினிமா

மணிரத்தினத்தை அசிங்கப்படுத்தி ராம் சரண் போட்ட ட்வீட்? சர்ச்சையை கிளப்பும் தெலுங்கு நடிகர்

வெளியிட்டது

ராம் சரண் ராஜமவுலியை பெருமைப்படுத்தி கூறியிருக்கும் கருத்து ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு அவர் ஏன் இப்படி ஒரு கருத்தை போட வேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் முண்ணனி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவர் இறுதியாக நடித்த படம் ஆர்ஆர்ஆர். இந்திய சுதந்திர போரட்ட கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ராம் சரண். இந்த நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலியை ஒரே ஒருவர் ராஜமௌலி மட்டும் தான் என அவர் பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது முதல் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடையே சண்டை நீடித்து வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகுபலி, ஆர்ஆர்ஆர் அளவிற்கு இல்லை மொக்கை படமாக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் அந்த படங்களில் வரும் பல காட்சிகள் பொன்னியின் செல்வனை காப்பியடித்து தான் எடுக்கப்பட்டது என்று தமிழ் ரசிகர்கள் ஆதாரத்துடன் போட்டு பதிலடி கொடுத்து வந்தனர். இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ட்விட்டரில் இரு ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டர். தற்போது வரை இந்த பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. எரிகிற நெருப்பிலே எண்ணையை ஊற்றுவது போல, ராம் சரண் தற்போது ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். இது தமிழ் ரசிகர்களை இன்னும் கொதிப்படைய வைத்துள்ளது.

மணிரத்தினத்தை அசிங்கப்படுத்தி ராம் சரண் போட்ட ட்வீட்? சர்ச்சையை கிளப்பும் தெலுங்கு நடிகர் 1

ராஜமௌளலி கேன்ஸ் விருது விழாவிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு மிகப்பெரிய கூட்டம் கரகோஷம் எழுப்ப உள்ளே நுழைந்தார் ராஜமௌலி. அந்த வீடியோவை பகிர்ந்து ஒரே ஒரு ராஜமௌலி மட்டும் தான் என பகிர்ந்து இருந்தார் ராம் சரண். இதை பார்த்த தமிழ் ரசிகர்கள், ஒரே ஒருவர் ராஜமௌலி என்றால், எங்கள் தமிழில் இயக்குனர்களே இல்லையா? பொன்னியின் செல்வன் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இது போன்ற ஒரு வீட்டை பகிர்வதற்கு காரணம் என்ன. மணிரத்தினத்தை தான் மறைமுகமாக தாக்கி இவ்வாறு போட்டிருக்கிறார் ராம் சரண், உங்களுக்கு எரிய ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் தமிழ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராம் சரண் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் RC15 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கியுள்ளன.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்