52 வயதிலும் குறையாத அழகு.! தமன்னாவை ஓவர்டேக் செய்த ரம்யாகிருஷ்ணன்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

சமீபத்தில் வெளியாகி மிக வைரலான காவலா பாட்டிற்கு தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1984 ஆம் ஆண்டு படங்களில் நடிக்க தொடங்கிய அவர், 2023 ஆம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து முடித்திருக்கிறார். ஸ்ரீதேவி காமாக்ஷி கடாக்ஷம் என்கிற படத்தில் அம்மனாக நடித்த அவர் பின்னாளில் பல அம்மன் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

52 வயதிலும் குறையாத அழகு.! தமன்னாவை ஓவர்டேக் செய்த ரம்யாகிருஷ்ணன்.! இதோ வீடியோ.! 1
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறாரா இல்லை வேறு ஏதும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. அவரின் கதாபாத்திரம் குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் போது அவர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவரும் என்று தெரிகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வரும் நிலையில் முதல் சிங்கிள் பாடலான காவலா பாட்டு பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வரும் நிலையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணனும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது தோழிகளுடன் சேர்ந்து காவாலா பாட்டுக்கு குத்தாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் தமன்னாவை ஓவர் டேக் செய்து ரம்யா கிருஷ்ணன் மிக அழகாக ஆடுவதாக பதிவிட்டு வருகின்றனர். 52 வயதிலும் அதே கரிஷ்மாவுடன் ரம்யா கிருஷ்ணன் இருந்து வருவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்