ரம்யா பாண்டியனை தெரியாத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமானவர். ஜோக்கர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ஆண் தேவதை என்ற படத்தில் இரண்டு பிள்ளைக்கு அம்மா வேடத்தில் நடித்து அசத்தினார். பிறகு சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோஷூட்டை கையில் எடுத்தார். சேலை கட்டி எடுத்த இவரின் புகைப்படங்கள் ஒரே இரவில் வைரலானது. 31 வயது ஆகும் ரம்யாவின் போட்டோஷூட்டிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கவர்ச்சி தூக்கலாக போட்டாக்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது ரம்யாவின் வழக்கம்.

இந்த பிரபலத்தைக் கொண்டு அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. படங்களில் கிடைக்காத பெயரும் புகழும் குக் வித் கோமாளி மூலம் கிடைத்தது. புகழ் ரம்யாவிடம் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் பார்ப்பதற்கு செம்ம காமெடியாக இருக்கும். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். அங்கே அவர் ‘விஷ பாட்டில்’ ரம்யா என்று விமர்சிக்கப்பட்டார். என்றாலும் மக்களின் ஆதரவு இருந்த காரணத்தால் இறுதிவரை வந்தார். பின்னர் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். Youtube Video Code Embed Credits: Ramya Pandiyan
பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைவாக இருந்ததால் ரம்யாவை உள்ளே இறக்கியது பிக்பாஸ் டீம். ஆனால் அங்கிருந்தும் சில நாட்களில் வெளியேறினார். பின்னர் எந்த வாய்ப்பும் சரியாக கிடைக்காததால், இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து வருகிறார். தற்போது அவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த ரியோவுடன் மிக நெருக்கமாக ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..