உங்களுக்கு வயசே ஆகாதா நீலாம்பரி.! சக்கு சக்கு பத்திக்கிச்சு பாட்டுக்கு இறங்கி குத்தாட்டம் போட்ட ரம்யா

வெளியிட்டது

ரம்யா கிருஷ்ணன் தற்போது சக்கு சக்கு பத்திக்கிச்சு பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அம்மன் என்றாலே நம்முடைய கண்களுக்கு முதலில் வருபவர் ரம்யா கிருஷ்ணன். அந்த அளவிற்கு அம்மன் வேடம் தத்ரூபமாக பொருந்தும் ஒரு நபர் என்றால் அது ரம்யா கிருஷ்ணன் தான். 80 மற்றும் 90களில் நடிகையாக வாழ்க்கையை தொடங்கிய ரம்யா கிருஷ்ணனுக்கு அம்மன் படங்கள் திருப்புமுனையாக அமைந்தன. இவர் முதல் முதலாக 1983ம் ஆண்டு தன்னுடைய 13வது வயதில் “வெள்ளை மனசு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 1995ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த அம்மன் என்ற படத்தில் முதன் முறையாக நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு வயசே ஆகாதா நீலாம்பரி.! சக்கு சக்கு பத்திக்கிச்சு பாட்டுக்கு இறங்கி குத்தாட்டம் போட்ட ரம்யா 1

பின்னர் அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான படம் படையப்பா. அந்த படத்தில் நீலாம்பரியாக வந்து நடிப்பில் பின்னி எடுத்து இருப்பார் ரம்யா கிருஷ்ணன். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 300 படங்களில் நடித்துள்ளார். மேலும் கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார் என அனைத்து முண்ணனி நடிகர்களுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. பின்னாளில் பாகுபலி படத்தில் சிவகாமி தேவியாக இவர் நடித்துபோது ரசிகர்கள் வாயடைத்துப் போயினர். மிக கெத்தான ரோலில் நடித்தார். நீலாம்பரி தொடங்கி சிவகாமி தேவி வரை அப்படியே கெத்து காட்டினார் ரம்யா.

தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு டிவி பக்கம் தலைகாட்டத் தொடங்கியுள்ளார். பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று உள்ளார். இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று கொண்டுள்ளது. மிக ஜாலியான நபரான ரம்யா கிருஷ்ணன், தற்போது சக்கு சக்கு பத்திக்கிச்சு பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்