Categories: சினிமா

தமிழ் ஈழம் குறித்து படம் எடுக்கிறாரா பா.ரஞ்சித்!!!கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டுள்ள வேட்டுவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!!

வெளியிட்டது

இலங்கையில் நடைபெற்ற தமிழ் ஈழ படுகொலைகளை பற்றி நம் அனைவரும் அறிந்ததே. பிரபாகரன் என்றொரு தலைவனை கொன்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்து அராஜக செயல்களை செய்தது இலங்கை ராணுவம்.

தமிழ் ஈழம் குறித்து படம் எடுக்கிறாரா பா.ரஞ்சித்!!!கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டுள்ள வேட்டுவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!! 1

இப்பொது நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அரசிற்கு அவர்கள் ஒரு இனத்தின் மீது வன்முறை ஆடம் செய்ததால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என இப்போது பல தமிழ் தலைவர்களும் அங்குள்ள அரசை விமர்சித்து வருகினற்னர்.

இந்நிலையில் சமூகம் குறித்தும்,அதில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் படம் இயக்கும் பா.இரஞ்சித் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தொடர்ந்து “மெட்ராஸ்,கபாலி,காலா” போன்ற படங்களை இயக்கினார். அண்மையில் குத்து சண்டையை மையப்படுத்தி இவர் இயக்கிய “சர்பேட்ட பரம்பரை” அசத்திய விமர்சனங்களை பெற்றது.

அடுத்து ‘நட்சத்திரம் நகர்கிறது” படத்தை இயக்கி வருகிறார். அடுத்து கமலுடனும், விக்ரமுடனும் படங்களில் இணைய உள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் ஃபாரிஸ் நகரில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ள அவர், அங்கு தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியீட்டுள்ளார்.

“வெட்டுவம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை அங்கு வெளியிட்டுள்ளார். இரண்டு புலிகள் இடம் பெற்றுள்ள அந்த போஸ்டரில் ஒன்று நேராகவோ மற்றொன்று தலைகீழாகவும் உலகில் நடப்பது போல அந்த போஸ்டர் வடிவமைக்க பட்டுள்ளது.

இந்த ஒரு வேளை இயக்குனர் தமிழ் ஈழ படுகொலை குறித்து படம் எடுக்குறாரா? இல்லை சிங்கள ராணுவத்தால் அழிக்கப்பட்ட தமிழ் ஈழ தலைவர்கள் யாரெனு குறித்து படம் எடுக்கிறாரா? என மக்களை யோசிக்க வைத்துள்ளது.

ஆனால் உண்மையில் இந்த தலைமுறை தமிழ் மக்களிடம் இருந்து மறைக்க பட்ட ஒரு உண்மை சம்பவத்தை வைத்து ரஞ்சித் போன்ற சிறந்த இயக்குனர் படம் எடுத்தால், அந்த மறைக்கப்பட்ட வரலாறு மக்களிடம் சென்றடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்