ரஷ்மிகாவை சந்திக்க ரசிகர் ஒருவர் எடுத்த Risk! ஆனந்த கண்ணீரோடு Tweet போட்ட ராஷ்மிகா

வெளியிட்டது

தென்னிந்திய சினிமாவில் குறைந்த படங்களிலே மிகுந்த பிரபலமடைந்த இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட படமான கிரிக் பார்ட்டி எனும் படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் தொடர்ந்து கன்னட பட வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தார். தென்னிந்திய திரையுலகில் ஓர் நடிகை ஹிட்டாகி விட்டால் அவருக்கு தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடும்.

ரஷ்மிகாவை சந்திக்க ரசிகர் ஒருவர் எடுத்த Risk! ஆனந்த கண்ணீரோடு Tweet போட்ட ராஷ்மிகா 1

அப்படி தான் ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது. அவர் தெலுங்கு திரையுலகில் முதன்முதலில் “சலோ” எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிகு கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார் ராஷ்மிகா. இதில் இளம் நடிகரான விஜய் தேவரகொன்டா அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

தெலுங்கு மட்டுமல்லாமல் இந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ், மலையாளம் என ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களைக் கவர்நதார் ராஷ்மிகா. இவருடைய வசீகர நடிப்பும், சுட்டி தனமான முகபாவனையும் ரசிகர்கள் இவர் பக்கம் திருப்பியது. பின்னர் பல பட வாய்ப்புகள் பெற்றார். தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.


இந்நிலையில் பிரமாண்ட ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ராஷ்மிகா மந்தனாவை நேரில் காண தெலுங்கு ரசிகர் ஒருவர் இந்த லாக்டவுனில் அவரது வீட்டை கண்டுபிடித்து பார்த்தாக வேண்டும் என்று முயற்சித்தார். அவரது முயற்சி தோல்வியடைந்தது.

இதனை அறிந்த ராஷ்மிகா தனது ட்விட்டரில் இத்தகைய இக்கட்டான சூழலில் இப்படிபட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் எனவும் இப்படிபட்ட ரசிகரை சந்திக்காமல் போனது தனக்கு வருத்தமளிப்பதாகவும் ஒரு நாள் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அதுவரையில் இருக்கும் இடத்திலே அன்பு செலுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார். இவர் தற்போது மும்பையில் தங்கி பாலிவுட் படத்தில் நடித்திக்கொண்டிருக்கிறார்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்