சீரியல் ஆரம்பித்து ஒரு வருடம் கூட முழுமையாக முடிவு பெறாத நிலையில் ரட்சிதா மகாலட்சுமி நடித்து வரும் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் இந்த நாடகம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் அதன் பின்னர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து அசத்தினார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த சீரியலில் இருந்து திடீரென ஒரு நாள் விலகினார். அப்போது அவர் கூறும் பொழுது, தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றும், பல நேரங்களில் மதிப்பற்றவளாக உணர்ந்ததால், இந்தத் தொடரில் தனக்கு மதிப்பில்லை என்று விலகுவதாக அறிவித்திருந்தார்.
மேலும் ஜீ தமிழில் ஒரு தொடரில் கெஸ்ட் ரோலாக நடித்திருந்தார். பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்ல மறந்த கதை என்னும் தொடரில் நடித்து வருகிறார். அவருடன் சத்யா சீரியல் அமுல் பேபி யாக நடித்து வந்த விஷ்ணு நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் கலர்ஸ் தமிழில் தொடங்கப்பட்ட இந்த சீரியலில், கணவனை இழந்து தனியாக குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாய், நீதி கேட்டு போராட்டத்தை நடத்தும் ஒரு பெண்ணின் கதையாக “சொல்ல மறந்த கதை” நாடகம் ஒளிபரப்பாகி வந்தது.
இதில் சாதனா என்ற கதாபாத்திரத்தில் ரட்சிதா நடித்து வந்தார். அவருடைய நடிப்பு மிக அருமையாக இருந்ததால், பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினர். நீதி கேட்டு அவர் நடத்திய போராட்டம், அவருக்கு ஒரு உதவியாக பத்திரிக்கையாளராக அர்ஜூன் ரோலில் விஷ்ணுவும் நடித்து வந்தனர்.
இந்த நிலையில் சீரியல் தொடங்கி ஆறு மாதங்களே ஆன நிலையில் அந்த சீரியலை முடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ஒரு ப்ரோமோவில் இறுதி கட்டத்தை நோக்கி என்று ப்ரோமோ வெளியாகி இருந்ததால், இதன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீரியல் ஆரம்பித்து ஒரு வருடம் கூட முழுமையாக முடியாத நிலையில, சீரியலை முடிக்க என்ன காரணம் என்று கேட்டு வருகின்றனர். ஏற்கனவே ரட்சிதா தன் கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்க ஒப்பந்தமான ரட்சிதாவிற்கு இது அடிமேல் அடியாக பார்க்கப்படுகிறது.
Youtube Video Code Embed Credits: Colors Tamil