“கையில சிகரேட்…..வில்லி கெட்டப்….கொலை போஸ்டரில் மிரட்டும் ராதிகா”

வெளியிட்டது

"கையில சிகரேட்.....வில்லி கெட்டப்....கொலை போஸ்டரில் மிரட்டும் ராதிகா" 1

இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுக இப்பொது நடிகராக வெற்றிகரமாக வளம் வருபவர் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. “நான்” படம் மூலம் நடிகரான இவருக்கு “பிச்சைக்காரன்” படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ் மட்டுமின்றி மொழி மாற்றம் செய்யபட்ட இந்த படம் தெலுங்கிலும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. கடைசியாக கோடியில் ஒருவன் படத்தில் நடித்துஇருந்த இவர் இப்பொது “கொலை, அக்னிச்சிறகுகள், வள்ளி மயில்” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் தற்போது கொலை படத்தின் போஸ்டர் ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. விடியும் முன் என்ற திரில்லர் படத்தை இயக்கிய “பாலாஜிகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன், மிஸ்டரி, திரில்லர் கக்கதைகளத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். நாயகியாக ரித்திகா சிங்க் நடித்துள்ளார்.

ஒரு கொலை சம்பவத்தை சுற்றி நடக்கும் கதைக்களத்தில் கொலையை கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி முயல்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் விஜய் அந்தோணிக்கு அடுத்து முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார்.

80’களில் நாயகியாக கொடிகட்டி பறந்த இவர் இப்பொது நாயகர்களுக்கு அம்மாவாக முக்கிய கதாபத்திரங்களில் நடித்து மிரட்டி வருகிறார். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் “நானும் ரவுடி தான், தர்மதுரை” போன்ற படங்கள் நடிப்பில் வெளுத்துவாங்கி இருந்தார். அண்மையில் இவர் நடிப்பில் யானை படம் வெளியானது. இப்போது சிம்புவுடன் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துவருகிறார். இவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் “கொலை” படத்தில் இருந்து அண்மையில் வெளியாகியுள்ளது.

அன்பான அம்மாவாக நடித்து வரும் இவர் இந்த படத்தில்  வில்லி அவதாரம் எடுத்திருப்பதுடன், அல்ட்ரா மாடர்ன் டிரெசில் கையில் சிகரெட்டுடன், வில்லி லுக்குடன் செம கேத்தாக ராதிகா அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர் அனைவரையும் அதிர வைத்துள்ளது. போஸ்டர் வெளியானது முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்