நடுரோட்டில் மதுர வீரன் பாட்டுக்கு தாவணி சேலையில் மரண குத்தாட்டம் போட்ட ரவீணா.!

வெளியிட்டது

மௌன ராகம் சத்யா விருமன் படத்தில் வரும் மதுர வீரன் பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜில்லா படத்தில் விஜயுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் ரவீணா தாஹா. பின்னர் 2018ம் ஆண்டு ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானார். இவரை மௌனராகம் சத்யா என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். எப்போதுமே பொது வெளியில் நடனம் ஆடி அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ரவீணாவின் வாடிக்கை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று மௌனராகம். டிஆர்பி ரேட்டிங்கிலும் சரி, ப்ரோமா வெளியான சில மணி நேரங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெறும் சீரியல் என்றால் அது மௌனராகம் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடுரோட்டில் மதுர வீரன் பாட்டுக்கு தாவணி சேலையில் மரண குத்தாட்டம் போட்ட ரவீணா.! 1

சிறு வயதில் தனது தந்தையை தேடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கு தனது தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை தெரிந்து கொண்டு அவர்கள் செய்யும் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் குழந்தையின் கதை. இது தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரவீணா தாஹா. இவர் மார்டன் உடையில் அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். இளைஞர்களை கவரும் வகையில் இவர் போட்டோ மற்றும் வீடியோக்களை போடுவதால் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட ரவீணா எந்தவொரு புது பாடல் வந்தாலும் அதற்க்கு நடனம் ஆடி ரீல்ஸ் செய்வது வழக்கம். இவரது நடனத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது சமீபத்தில் வெளியாகி பலரின் விருப்ப பாடலாக இருக்கும் மதுர வீரன் பாடலுக்கு பாவாடை தாவணியில் செம்ம cute ஆக நடனம் ஆடியுள்ளார் ரவீணா. விருமன் படத்தில் அதிதி பாடி நடித்துள்ள இந்த பாடலுக்கு ரவீணாவும் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்