பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து தற்போது பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பலரும் மாயா மற்றும் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பாராத போட்டியாளர் ஒருவரை பிக் பாஸ் குழுவினர் வெளியேற்றி இருக்கின்றனர். விஜய் டிவியின் நம்பர் 1 நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் சீசன் 7. 89 நாட்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் ஏழு பேர் சிக்கி இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் கிடைத்து வருகின்றன.

மேலை நாடுகளில் ஒளிபரப்பான பிக் பிரதர் என்கிற நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஆறு சீசன்களை முடித்து தற்போது ஏழாவது சீசனில் இந்த நிகழ்ச்சி அடி எடுத்து வைத்திருக்கிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு ஸ்மால் பாஸ், பிக் பாஸ் என்று வீடுகள் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. மேலும் 23 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. 18 போட்டியாளர்கள் ஆரம்பத்திலும் ஒரு மாதம் கழித்து ஐந்து போட்டியாளர்கள் என 23 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பத்து பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் மாயா, விஷ்ணு, மணி, ரவீனா, நிக்சன், விஜய் வர்மா என்று மொத்தம் ஏழு பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.
இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் நடந்து வருகிறது. இந்த டாஸ்க்கில் விஷ்ணு அதிக புள்ளிகளை பெற்ற முன்னணியில் இருந்து வருகிறார். விசித்ரா மற்றும் ரவீனா இருவரும் ஒரு புள்ளிகள் பெறாமல் கடைசி இடத்தில் இருந்து வருகின்றனர். இதில் ரவீனா இந்த வார நாமினேஷனில் சிக்கி இருப்பதால் அவரை பிக் பாஸ் வெளியேற்றி இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. நமது இணையதளம் உட்பட அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்புகளில் நிக்சன் மற்றும் மாயா இருவரும் கடைசி இடத்தைப் பிடித்து வந்தனர். இவர்களில் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ரவீனாவை வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விசித்ரா ரவீனா இருவரும் எந்த புள்ளிகளையும் பெறாத போதிலும், ரவீனா நாமினேஷனில் இருப்பதால் பிக் பாஸ் வெளியேற்றி இருப்பதாகவே தெரிகிறது. ஒருவேளை இரட்டை வெளியேற்றம் இருந்தால் இந்த வார இறுதி எபிசோடில் மாயா அல்லது நிக்சனில் ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.