பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்து வந்த ரவீனா கடந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டார். இந்த நிலையில் வெளியேறிய பின்னர் தற்போது அவர் உருக்கமான கடிதம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மௌனராகம்’ என்கிற சீரியலின் மூலமாக பிரபலமானவர் ரவீனா. இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7 முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் 91வது நாள் அவருக்கு குறைவான வாக்குகள் கிடைத்த காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். எப்பொழுதும் மணியுடன் நெருக்கமாக இருக்கிறார். அவருக்கு ஆதரவாகவே விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு ரவீனா மீது இருந்து வந்தது.

குடும்பத்தினர் வரும் எபிசோடில் ரவீனாவின் குடும்பத்தினர் இதைக்கூறி ரவீனாவை கண்டித்திருந்தனர். ஒரு கட்டத்தில் மணி ஜெயிக்க வேண்டும் என்று ரவீனா விளையாடத் தொடங்கியதால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைவான வாக்குகளை அளித்து மக்கள் வெளியேற்றி இருக்கின்றனர். வெளியேறியப் பிறகு ரவீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “முதலாவதாக என்னுடைய ஆழ் மனதில் இருந்து நான் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நீங்கள் எனக்கு அளவு கடந்த அன்பை கொடுத்தீர்கள். 91 நாட்களாக நான் உங்களை எல்லாம் பொழுதுபோக்காக வைத்திருந்தேன் என்பதை நம்புகிறேன். என்னுடைய தகுதிக்கு ஏற்றார் போல் நான் விளையாடினேன். பிக் பாஸ் வீட்டில் என்னுடைய அனுபவத்தை பற்றி கூற வேண்டும் என்றால் அதை ஒரு மெசேஜில் சொல்லி விட முடியாது.
சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், பிக்பாஸ் வாழ்க்கையை மாற்றும் அனுபவம். கமலஹாசன், விஜய் டிவி, எண்டோமால் குரூப்பிற்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறேன். மேலும் என்னுடன் விளையாடிய போட்டியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நான் வீட்டில் இருப்பது போல உணர வைத்ததற்கு அவர்களுக்கு நன்றிகள். பிக் பாஸ் குழுவினருக்கும், இரவு பகலாக அந்த நிகழ்ச்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் கற்றுக் கொண்டது என்னுடைய நடத்தையில் இருக்கும் குறைபாடுகளை நான் மாற்றிக் கொள்கிறேன். உங்கள் எல்லாருடைய கருத்துக்களையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.
பிக் பாஸ் சீசன் 7 எப்பொழுதும் எனது மனதிற்கு நெருக்கமான ஒன்று. மேலும் நீங்கள் கொடுத்த தொடர்ச்சியான அன்புக்கு நன்றி. நிறைய வாய்ப்புகள் வரும்பொழுது உங்களை மீண்டும் என்டர்டைனாக வைத்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன் நன்றிகளுடன் ரவீனா தாஹா” என்று பதிவிட்டு இருக்கிறார்.