பல கோடி மோசடி செய்துள்ள தயாரிப்பளார் ரவீந்தர்.! அதிரடியாக கைது செய்த காவல்துறை.!

வெளியிட்டது

ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த செய்தி தற்போது அவரது ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே ஒரு திருமணம் செய்து அதன் மூலமாக பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன். மிக பருமனாக இருக்கும் இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகன் இருக்கும் நிலையில் முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று இரண்டாவதாக ரவீந்திரன் சந்திரசேகரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இணையத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல கோடி மோசடி செய்துள்ள தயாரிப்பளார் ரவீந்தர்.! அதிரடியாக கைது செய்த காவல்துறை.! 1

பணத்துக்காக தான் மகாலட்சுமி இது போல திருமணம் செய்து கொண்டார் என்கிற விமர்சனம் அவர் மீது எழுந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து சிங்கிள்ஸ்களை வெறுப்பேற்றி வந்தார் ரவீந்திரன். மேலும் தனது ஹேட்டர்ஸை தாக்கும் விதமாகவும் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி இருந்தனர். அப்போது பதிவிட்டிருந்த அவர், “மூன்று மாதம் கூட தாங்காது என்று சொன்னார்கள், ஆனால் நாம் ஒருவரிடம் வாழ்ந்து காட்டி விட்டோம், இவர்கள் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் அம்மி” என நீண்ட கவிதை ஒன்றை எழுதி பதிவிட்டு இருந்தார். இப்படியான நிலையில் தற்போது ரவீந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி ரூ.16 கோடியை வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தற்போது ரவீந்திரனை அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த செய்தி ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஜோடிகளின் ரசிகர்களுடைய மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.! அந்த செய்தியை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: News Tamil 24X7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்