Categories: சினிமா

ரவீந்தர் திருமணத்திற்கு வனிதா வாழ்த்து சொன்னாரா? போட்டு உடைத்த ரவீந்தர்

வெளியிட்டது

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருக்கும் ஒரு திருமணம்தான் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணம். இவர்கள் இருவரும் சத்தமில்லாமல் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த திருமணத்திற்கு திரையுலகினர் யாரையும் அழைக்காமல் தங்களது குடும்பத்தினரை மட்டும் வைத்து எளிய முறையில் திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே இரண்டாவது திருமணம் தான். ரவீந்தரை தயாரிப்பாளராக தெரிந்ததை விட பிக்பாஸ் விமர்சகராகவே பலருக்கும் தெரியும். குறிப்பாக சீசன் 3ல் வனிதாவை இவர் விமர்சித்ததால் இருவருக்கும் சண்டை அதிகமானது. இதனால் ரவீந்தர் குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவீந்தர் திருமணத்திற்கு வனிதா வாழ்த்து சொன்னாரா? போட்டு உடைத்த ரவீந்தர் 1

வனிதாவுக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் மூன்றாவதாக திருமணம் நடைபெற்றது. இதில் பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் திடீரென வனிதாவும் பீட்டர் பாலும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, பீட்டர் பாலின் முதல் மனைவி பிரச்சனை செய்தார். என்னிடம் விவாகரத்து கூட வாங்காமல் வனிதாவை பீட்டர் பால் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக பீட்டர் பாலின் முதல் மனைவி அப்போது பேட்டிகளில் கூறி வந்தார். இதனால், வனிதா செய்வது தவறு, ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் ஒரு நபரை, விவாகரத்து கூட பெறாமல் இருக்கும் ஒரு நபரை வனிதா திருமணம் செய்து கொள்வது தவறு என்று ரவீந்திரன் கூறி வந்தார். இதனால் வனிதாவிற்கும் ரவீந்திரனுக்கும் வார்த்தை போர் ஏற்பட்டது. பின்னர் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக இருந்து பல உதவிகளை செய்து வந்தார் ரவீந்திரன்.

தற்போது ரவீந்திரன் திருமணம் மீது பலரும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். வனிதா, பீட்டர் பாலை திருமணம் செய்த போது இவர் திருமணம் செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்து வந்துவிட்டு தற்போது இவரே இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்று வனிதா விஷயத்தை மேற்கோள் காட்டி ரவீந்திரனை விமர்சித்து ஒரு தரப்பினர் விமர்சித்து வந்தனர். தற்போது அதற்கு ரவீந்திரன் ஒரு விளக்கம் அளித்துள்ளார். வனிதா விஷயத்தில் அவர் விவாகரத்து பெறாமலேயே இன்னொருவரை திருமணம் செய்ய முயற்சித்தார். ஆனால் எங்கள் விஷயத்தில் அப்படி இல்லை, நானும் விவாகரத்தும் பெற்றவன், எனது மனைவி மகாலட்சுமியும் முறையாக விவாகரத்து பெற்று விட்டு தான் இருவரும் செய்தி திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

வனிதா விஜயகுமார் தன்னுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பார் என்று தான் மகாலட்சுமியிடம் சேலஞ்ச் பண்ணி இருந்தேன். ஆனால் இன்றுவரை வனிதா எங்கள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவருக்கு இந்த விஷயம் தெரியாமல் இருந்திருக்கலாம். கண்டிப்பாக என்னுடைய திருமணம் பற்றி அவருக்கு தெரிய வந்தால் மனதார எங்களை வாழ்த்தியிருப்பார் ஏனென்றால் அவர் இது போன்ற கஷ்டங்கள் பலவற்றை கடந்து வந்துள்ளார். அவர் மிகுந்த ஸ்ட்ராங்கான லேடி. எனவே அவர் எங்கள் திருமணம் பற்றி தெரிந்தால் உங்களை மனதார வாழ்த்துவார் என்று ரவீந்திரன் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்