பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள்..! மஹாலக்ஷ்மியின் பிறந்தநாளுக்கு உருகி உருகி கவிதை எழுதிய ரவீந்தர்.!

வெளியிட்டது

தனது மனைவியின் பிறந்த நாளுக்காக உருகி உருகி நீண்ட கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார் லிப்ரா ப்ரொடக்சன்ஸ் நிறுவன உரிமையாளர் ரவீந்தர். அவர் எழுதி இருக்கும் அந்த கவிதையில் “பிறந்தநாள், ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள். பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இஷ்டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம்தான் என் மகாலக்ஷ்மி. ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம்தான். ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உருவாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன். நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு அவசியம் இல்ல.அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் இருப்பாங்க. ஆனா நாம பல பேர நேசிக்க மறந்துருப்போம். அவங்க நம்மல அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்பதான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே தோனுச்சு.

பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள்..! மஹாலக்ஷ்மியின் பிறந்தநாளுக்கு உருகி உருகி கவிதை எழுதிய ரவீந்தர்.! 1

 

மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்றதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது ஸ்வீட் குடுக்குறது முதியோர் இல்லம் அனாதை இல்லன்னு போய் சாப்பாடு போடுறது,பிடிச்ச gift வாங்கி குடுக்குறது இப்படி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றதுதான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம்தான் இந்த ‘மல்லிகை பூ’. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான். இந்த பூவிற்கு நிகர் ஏதுமில்ல என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமில்ல. என்னப் பொருத்தவர இந்த பூ மிகப்பெரிய ஒரு gift உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூ வில் அதிகமா இருக்கு. So my humble gift வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன்முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குதான். I love you mahalakshmi” என்று பதிவிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்களுக்கு கீழே மஹாலக்ஷ்மி அவருக்கு நன்றி தெரிவித்து பதில் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் என்னிடம் எல்லாம் இருக்கிறது அம்மு… உனக்கு தெரியுமா, இந்த மலர் எனக்கு மிகவும் விலையுயர்ந்த ஒன்று, ஏனென்றால் உன்னால் யாருக்கும் எதையும் பரிசளிக்க முடியும், ஆனால் ஒரு கணவன் மட்டுமே தன் மனைவிக்கு ஒரு பூவை பரிசளிக்க முடியும்… நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.. எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் கொடுத்த பரிசு. இறைவன்…. லவ் யூ மை அம்மு என்று ரவிந்தருக்கு பதில் அளித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் மஹாலக்ஷ்மிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்