Categories: சினிமா

வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்.! PS -2 படத்திற்கு ஐஸ்வர்யா ராய் வராததற்கு இதுதான் காரணமா..?

வெளியிட்டது

நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் பாகம் இரண்டில் ப்ரமோஷன்களில் கலந்து கொள்ளாதது குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கை தொடர்ந்திருக்கிறார். அதன் வழக்குப் பணிகளுக்காக தற்போது ஆராத்யாவுடன் அலைந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அதனால் தான் அவரால் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கிய இந்த பிரம்மாண்டமான படத்தில் நந்தினி மற்றும் ஊமை ராணி என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாம் பாகம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்க்ப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்.! PS -2 படத்திற்கு ஐஸ்வர்யா ராய் வராததற்கு இதுதான் காரணமா..? 1
இந்த நிலையில் பிரமோஷன் பணிகளுக்காக பொன்னியின் செல்வன் படக் குழு தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் கோயம்புத்தூர், சென்னை மற்றும் திருச்சி ஆகிய மூன்று இடங்களிலும் இந்திய அளவில் ஹைதராபாத், பெங்களூர், மும்பை, கொச்சின், டெல்லி என்று இந்தியா முழுமைக்கும் ஒரு சுற்று பயணத்திற்கு தயாராகி வருகின்றனர். தற்போது இந்த சுற்றுப்பயணத்தில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளவில்லை. பொன்னியின் செல்வன் பாகம் 1 வெளியான போது படக்குழுவினருடன் ஐஸ்வர்யாராயும் இணைந்து அனைத்து ஊர்களுக்கும் சென்று ப்ரோமோஷனில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இரண்டாவது பாகம் ப்ரமோஷனிலும் கலந்து கொள்வார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை.தற்போது அது குறித்த முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஐஸ்வர்யாராயின் மகள் ஆராதியாவிற்கு தற்போது 11 வயதாகிறது. சமீபத்தில் youtube இல் சிலர் ஆராத்யாவின் உடல்நலம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆராத்யா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார் தனது உடல் நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர் அந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். ஆராத்யாவின் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவர் உடல் நலம் மீது அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோக்களை நீக்கவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். மகளுடன் சட்ட போராட்டத்திற்காக அலைந்து கொண்டிருந்த காரணத்தால் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டின் ப்ரோமோஷன் பணிகளில் ஐஸ்வர்யா ராயால் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது ஆராத்யாவிற்கு வெற்றி கிடைத்துள்ளதால், மீண்டும் ப்ரோமோஷன் பணிகளுக்காக ஐஸ்வர்யா ராய் வருவார் என்று தெரிகிறது. இன்னும் சில தினங்களில் மும்பையில் நடக்க இருக்கும் ப்ரோமோஷன் பணிகளிலும் ஐஸ்வர்யாராய் ஈடுபடுவார் என்று தெரிகிறது.! அந்த செய்தியை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Reflect News Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்