சன் டிவி சீரியல் தான் முக்கியம்.! Vijay TV-யின் கிழக்கு வாசல் சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய நடிகை.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியல்தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு தற்போது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கப்பட இருக்கும் கிழக்குவாசல் சீரியலில் இருந்து நடிகை ஒருவர் விலகி இருக்கும் செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி பலரின் மனங்களை வென்ற ஒரு தொடர் என்று சொன்னால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலில் பணிபுரியும் ஒவ்வொரு கலைஞருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

சன் டிவி சீரியல் தான் முக்கியம்.! Vijay TV-யின் கிழக்கு வாசல் சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய நடிகை.! 1

அந்த வகையில் கரிகாலனின் அம்மாவாக ஜான்சிராணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் காயத்ரிக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கப்பட்ட இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் கமிட்டாகி இருந்தார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அவருடைய கதாபாத்திரம் இடம்பெறவில்லை. எனவே அவர் இந்த சீரியலை விட்டு விலகி இருப்பதாக தெரிகிறது.

அவர் சீரியலை விட்டு விலகியதற்கான காரணங்கள் தெரியவில்லை. இந்த சீரியல் துவங்கும் பொழுது எடுக்கப்பட்ட குழுப் புகைப்படத்தில் அவருடைய புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் கிழக்கு வாசல் சீரியலில் நடித்த கலைஞர்கள் தங்களை அறிமுகப்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில் கதாபாத்திரத்தின் பெயருடன் அந்த வீடியோவை கிழக்கு வாசல் சீரியல் நடிகர்கள் வெளியிட்டிருந்தனர். அதில் காயத்ரியின் கதாபாத்திரமும், அவரும் இடம் பெறவில்லை. எனவே அப்போதே அவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கக்கூடும் என்கிற தகவல் இணையத்தில் கசியத் தொடங்கியது.

ஆனால் சிலரோ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த வீடியோ எடுக்கும் பொழுது காயத்ரி இல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூறி வந்தனர்.ஆனால் அவருக்கு பதிலாக நடிகை தாரணி அந்த கதாபாத்திரத்தை ஏற்று இருப்பதாக தெரிகிறது.

நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் காயத்ரி கிருஷ்ணன். இவருக்கு அறிமுகம் கொடுத்தது அயலி திரைப்படம் தான். பின்னர் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை எதிர்நீச்சல் சீரியல் கொடுத்திருக்கிறது. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அமுதாவும் அன்னலட்சுமி தொடரிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என பிசியாக இருந்து வரும் காயத்ரிக்கு கால்ஷீட் கொடுப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. எனவே தன்னை ஏற்றிவிட்ட எதிர்நீச்சல் சீரியல் தான் முக்கியம் என்று சொல்லி கிழக்கு வாசல் தொடரிலிருந்து அதிரடியாக காயத்ரி விலகி இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. சீரியல் தொடங்குவதற்கு முன்பே நடிகைகள் விலகுவது விஜய் டிவி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்