தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் கலக்கியவர் நெப்போலியன். பலவெற்றிப்படங்களை கொடுத்து சிறந்த நடிகர் என பெயரை எடுத்து இருந்தார். கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார் இவர். இவர் தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் படங்கள் நடித்து இருக்கிறார். மேலும் அரசியலிலும் களம் இறங்கி அமைச்சராகவும் பணியாற்றி இருந்தார்.

தற்போது இவரின் மூத்த மகன் தனுஷுக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார். மேலும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு இவர் தற்போது மிகப்பெரிய தொழிலதிபர் ஆகியுள்ளார். மேலும் அமெரிக்காவில் சொந்தமாக வீடும் வாங்கியுள்ளார். இவர் மகன் தனுஷின் திருமண நிச்சயம் அண்மையில் நடைபெற்று இருந்தது. நெப்போலியன் திருநெல்வேலியில் இருந்து தனது மகனுக்கு பெண் பார்த்து உள்ளார்.
தற்போது திருமணத்திற்காக ஜப்பான் சென்றுள்ளார். நெப்போலியன் அமெரிக்காவில் இருந்துகொண்டு திருமணத்திற்கு ஜப்பான் செல்ல காரணம் குறித்து, தமிழா தமிழா நிகழ்ச்சி பாண்டி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் ,குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் திருமணத்தை அமெரிக்கா அனுமதிக்காது எனவும் ஆனால் இந்த திருமணம் ஜப்பானில் சட்டப்படி செல்லும் என்பதால் அங்கு திருமணத்தை நடத்துவதாக கூறியுள்ளார்.