46 வயதில் சன் டிவி சீரியல் நடிகையுடன் திருமணத்தை முடித்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரெடிங் கிங்ஸ்லிக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. சீரியல் நடிகை ஒருவரை அவர் கேரளாவில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் குறிப்பிடத் தகுந்த முன்னணியின் காமெடி நடிகர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிறார் கிங்ஸ்லி. வித்தியாசமான உடல் மொழி மற்றும் பேச்சுத் திறமையால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

Nippon Paint Spotless NXT Kannada 15 Sec TVC feat. Redin Kingsley - YouTube
தூத்துக்குடியில் பிறந்த இவர் 1998ம் ஆண்டு வெளியான ‘அவள் வருவாளா’ படத்தில் ஒரு பாடலில் இடம்பெற்றதன் மூலமாக திரையுலகில் நுழைந்தார். திரையுலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அரசு கண்காட்சிகளை நடத்தும் நிகழ்ச்சி அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் இவருக்கு 2018ம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

அதன் பின்னர் எல்கேஜி, கூர்கா, டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, பத்து தல, சொப்பன சுந்தரி, ருத்ரன், டிடி ரிட்டன்ஸ், ஜெயிலர், மார்க் ஆண்டனி போன்ற பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது சூர்யாவுடன் இணைந்து ‘கங்குவா’, திரைப்படத்திலும் ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


படங்களில் பிஸியாக நடித்து வரும் அவருக்கு வயது 46 ஆகும். இந்த நிலையில் அவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ‘திருமகள்’, ‘அரண்மனைக்கிளி’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை சங்கீதாவை திருமணம் செய்து இருக்கிறார். சங்கீதா, ‘மாஸ்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘வீட்டுல விசேஷம்’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.


சங்கீதா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆனந்த ராகம்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ரெடிங் கிங்ஸ்லியை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரளாவில் வைத்து எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.!


பலரும் இந்த புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்