மனைவியுடன் தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி..! வெளியான புகைப்படங்கள் இதோ..!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி தனது மனைவியுடன் இணைந்து தல பொங்கலை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவரது மனைவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பலரும் ரெடின் கிங்ஸ்லிக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மனைவியுடன் தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி..! வெளியான புகைப்படங்கள் இதோ..! 1
‘அவள் வருவாளா’ என்ற படத்தில் நடன கலைஞராக தனது திரை வாழ்க்கை ஆரம்பித்தவர் கிங்ஸ்லி. அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் அரசு நடத்தும் கண்காட்சிகளில் நிகழ்ச்சி அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இவருக்கு 2018ம் ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ என்கிற படத்தில் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


தனது வித்தியாசமான உடல் மொழி மற்றும் பேச்சுத் திறமையால் பலரையும் சிரிக்க வைத்த ரெடின் கிங்ஸ்லிக்கு இந்த படத்திற்கு பின்னர் ‘எல்கேஜி’, ‘கூர்கா’, ‘டாக்டர்’, ‘அண்ணாத்த’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘கட்டா குஸ்தி’, ‘பத்து தல’, ‘சொப்பன சுந்தரி’, ‘ஜெயிலர்’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


தற்போது இவர் ‘கங்குவா’ மற்றும் ‘வாஸ்கோடகாமா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்து இருக்கிறார். 46 வயதாகும் அவர் சன் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை சங்கீதாவை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருந்தார். பெங்களூருவில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்று இருந்தது.


இந்த நிலையில் தனது மனைவியுடன் இணைந்து முதல் பொங்கலை கொண்டாடி இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. தல பொங்கல் கொண்டாடிய அவர்களது புகைப்படத்தை சங்கீதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்