Categories: சமூகம்

குறைந்து வரும் அமில வீச்சு தாக்குதல் !

சமீப காலமாக ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்து வரும் அமில வீச்சு தாக்குதல் ! 1
அமில வீச்சால் பாதிக்கப்பட்ட தீபிகா.

கடந்த காலங்களில் ஆசிட் எனப்படும் அமில வீச்சு அதிகமாக நடைபெற்று வந்தன. காதல் தோல்வி, ஒரு தலை காதல் என பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் அதிகளவில் நடந்தது. இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி ஒரு முக்கிய தீர்வை நோக்கி நகர்த்தியது. கடந்த 2013ஆம் ஆண்டு சில்லறையாகவும், உரிய ஆவணங்கள் இன்றியும் அமிலங்கள் விற்பனை செய்ய தடை விதித்தது.

ஆனால் இந்த தடைகளால் இத்தகைய குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. இருப்பினும் குற்றங்களின் எண்ணிக்கை சிறிதாக குறைந்திருக்கிறது.

தேசிய குற்ற ஆவண அமைப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 ஆம் ஆண்டு 223ஆக இருந்த அமில விச்சு சம்பவம், 2017ஆம் ஆண்டு 244ஆக அதிகரித்தது. ஆனால் இதன் எண்ணிக்கை 2108ஆம் ஆண்டு 228ஆக குறைந்துள்ளது.

இது போன்ற குற்ற சம்பவங்கள் மேற்கு வங்காளத்தில் 36 என பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேச மாநிலத்தில் 32, தெலங்கானா மாநிலத்தில் 10, குஜராத் மாநிலத்தில் 7, மத்திய பிரதேச மாநிலத்தில் 5 என குற்றங்கள் பதிவாகியுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்