Categories: சினிமா

பயில்வான் மாதிரி அறிவு இல்லாம கேள்வி கேக்காதீங்க.! நிருபரை கிழித்து தொங்கவிட்ட ரேகா நாயர்

வெளியிட்டது

படத்தில் ஏன் ஆ டை யி ல் லா ம ல் நடித்தீர்கள் என்று ரேகா நாயரை பார்த்து கேட்ட செய்தியாளரை கிழித்து தொங்க விட்டுள்ளார். இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரேகா நாயர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம் ஆகும். இந்தப் படம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் பலரும் படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் முதல் நான் லீனியர் படம் இல்லை என்று ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து பார்த்திபனை விமர்சித்து வருகிறார். ஆனால் இது முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம்தான் என்று என்று பார்த்திபனும் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார். ஆனாலும் படம் பற்றிய சர்சைகள் ஓய்ந்த பாடில்லை. இந்த படத்தின் கதாநாயகி பிரிகடா ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தி சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். அது ஓய்ந்துள்ள நிலையில் தற்போது ரேகா நாயரிடம் சர்ச்சை கேள்விகளை கேட்டு செய்தியாளர்கள் அவரை கடுப்பாக்கியுள்ளனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பயில்வான் மாதிரி அறிவு இல்லாம கேள்வி கேக்காதீங்க.! நிருபரை கிழித்து தொங்கவிட்ட ரேகா நாயர் 1

ரேகா நாயரைப் பொறுத்தவரை அவர் மிக தைரியமான பெண்மணி. பேட்டிகளில் மிக தைரியமாக பேசக்கூடிய ஒருவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவும், இவரும் நெருங்கிய தோழிகள். சித்ரா இறப்புக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என பாயிண்டாக கேள்வி கேட்டு பிரபலமானார் ரேகா. இதன்பிறகு இவரின் பேட்டிகள் வைரலாவது வழக்கம். அதனால் இவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவர் இரவின் நிழல் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அதில் ஒரு குழந்தையை தன் மார்பு மீது வைத்திருப்பது போன்ற காட்சியில் ரேகா நாயர் நடித்திருந்தார். இந்த காட்சியைப் பார்த்த பலரும் ரேகா நாயரை திட்டி இருந்தனர். வழக்கம்போல பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயரை சாடியிருந்தார். ஒரு நாள் வாக்கிங் செல்லும்போது பொது வெளியில் பயில்வானை வழிமறித்த ரேகா நாயர், அவரை திட்டி தீர்த்து விட்டார். நான் உன் மனைவியா அல்லது உன் பிள்ளையா நான் எப்படி வேணாலும் நடிப்பேன் அதைக் கேட்க நீ யாருயா என்று ஒருமையில் அவரை வசை பாடி தீர்த்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஏன் இப்படி இப்படி ஒரு காட்சியில் நடித்தீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு மிக கோவமாக நீங்களும், பயில்வான் போல் அறிவில்லாமல் கேள்வி கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களை பார்த்து கோபமாக கூறினார். முதுகை காட்டிbelow தவறு என்றால் நான் தற்போது ஜாக்கெட் போட்டு இருக்கிறேன் இப்போது என் முதுகு தெரிகிறது இதை தவறாக சொல்வீர்களா? என்று கோபத்துடன் கேட்டார் மேலும் கோவிலுக்கு செல்கிறீர்கள் அங்கு இருக்கும் சிலைகளும் உடையில்லாமல் தான் இருக்கிறது அதை பார்க்கும் உங்களுக்கு எந்த எண்ணம் தோன்றுகிறது? படத்தைப் பார்த்துவிட்டு கேள்வி கேளுங்கள் என்று சொல்லிவிட்டு கோபமாக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ரேகா நாயர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits:

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்