ரிலைன்ஸ்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 11,640 கோடி லாபம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு மூன்றாம் காலாண்டில் ரூ.11,640 கோடி நிகர லாபமாக பெற்றிருக்கிறது.

ரிலைன்ஸ்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 11,640 கோடி லாபம்! 1
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2018-19ஆம் காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.10,251 கோடி லாபம் பெற்றிருந்தது.

இதனை நடப்பாண்டோடு ஒப்பிடுகையில் 13.5 சதவீதம் அதிகமாகும். இதே நேரத்தில், இதன் மொத்த வருவாய் 1.4 சதவீதம் குறைந்து ரூ.1,68,858 கோடியாக உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய தொழிலான எண்ணெய் சுத்திகரிப்பு கடந்த ஆறு மாத காலமாக குறைந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இதன் வாயிலாக லாபவரம்பு மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது. ஆனாலும், பெட்ரோகெமிக்கல் வா்த்தகத்தில் தொடா்ந்து மந்த நிலையே காணப்படுகிறது.

இந்த நெருக்கடியை எதிா்கொள்ள ரீடெயில் வா்த்தகம் மற்றும் தொலைத்தொடா்பு துறையின் சிறப்பான செயல்பாடு மிகவும் உதவிகரமாக இருந்தது.

ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோா் வருவாய் 27 சதவீதம் அதிகரித்து ரூ.45,327 கோடியானது. ஜியோ நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் 62.5 சதவீதம் உயா்ந்து ரூ.1,350 கோடியானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்