“ரொம்ப பிரஷரா இருக்கு, என்னால முடில” சீரியலில் இருந்து விலகும் முடிவை எடுத்த ரேஷ்மா.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலாக இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது சீரியலில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக அறிவித்து இருக்கிறார். ‘தனக்கு மிகவும் இறுக்கமான அட்டவணை இருப்பதால், தன்னால் எதையும் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. உடல் நிலையும் சரி இல்லாத காரணத்தினால் சீரியலில் இருந்து விலகப் போகிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசிபுலேட்டி. இவர் இதற்கு பின்பு பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

"ரொம்ப பிரஷரா இருக்கு, என்னால முடில" சீரியலில் இருந்து விலகும் முடிவை எடுத்த ரேஷ்மா.! 1
பிக்பாஸ்க்கு முன்னரே இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ‘வாணி ராணி’, ‘மரகதவீணை’,’உயிர்மெய்’, ‘என் இனிய தோழி’, ‘ஆண்டாள் அழகர்’, ‘வம்சம்’ போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். பின்னர் 2016ம் ஆண்டு வெளிவந்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அதன் பின்னர் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இவர் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். வாய்ப்புகள் தேடி வந்த அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருக்கிறது ‘பாக்கியலட்சுமி’ தொடர். இந்த தொடரில் கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.


மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சீதாராமன்’ தொடரிலும் மஹா என்கிற கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் இந்த இரண்டு சீரியல்களில் ஏதாவது ஒரு சீரியலை விட்டு விலக இருப்பதாக முடிவு எடுத்திருக்கிறார் நேரமின்மை, இறுக்கமான ஷூட்டிங் அட்டவணை மற்றும் உடல் நல குறைவால் இரண்டு தொடர்களையும் பேலன்ஸ் செய்ய முடியவில்லை என்றும், படங்களில் கவனம் செலுத்த இருப்பதால் ஏதாவது ஒரு தொடரில் இருந்து விரைவில் விலக இருப்பதாகவும் அவர் லைவ் வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார். இதனால் அவர் எந்த தொடரில் இருந்து விலகப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுடைய எழுந்துள்ளது.

 

‘பாக்கியலட்சுமி’ தொடரில் நன்றாக நடித்து வருகிறீர்கள். அந்தத் தொடரில் இருந்து மட்டும் விலகி விடாதீர்கள் என்று சொல்லி ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்..! அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்