குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் கடமை என உச்சநீதி மன்றம் கருத்து கூறியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி உத்தவிட்டிருந்தது மத்திய அரசு. அன்று முதல் அம்மாநிலம் மொத்த இந்தியாவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

நூறு நாட்களை தாண்டியும் சேவையை திரும்ப தர மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. அதிக கட்டுப்பாடுகளை சுமந்து வரும் ஜம்மூ காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தனிநபர் சுதந்திரம், பாதுகாப்பை காப்பது நீதிமன்றத்தின் கடமை. இணையதளம் என்பதும் கருத்துரிமையின் ஒருபகுதியே. மிக மிக அசாதரண சூழ்நிலையில்தான் இணையதளத்தை முடக்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதி ரமணா குறிப்பிட்டார்.
காலவரையறை இன்றி இணையம் முடக்கப்படுவதை ஏற்க முடியாது. 7 நாட்களில் அனைத்து கட்டுப்பாடுகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.