Categories: சமூகம்

பிளாஸ்டிக் கொடுத்தால் எடைக்கு எடை அரிசி! ஜகன் மோகன் பிறந்தநாள் விழாவிற்கு சலுகை!!

வெளியிட்டது
பிளாஸ்டிக் கொடுத்தால் எடைக்கு எடை அரிசி! ஜகன் மோகன் பிறந்தநாள் விழாவிற்கு சலுகை!! 1

ஆந்திர மாநில முதல்வரான ஜெகன்மோகன் பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில், பிளாஸ்டிக் வழங்குபவர்களுக்கு எடைக்கு எடை அரிசி வழங்கும் திட்டத்தை மாநில தொழிற்சாலைகள் திட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆணைய தலைவர் ரோஜா தொடங்கி வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் ஆந்திர முதல்வரான ஜெகன்மோகன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆணைய தலைவரும் நடிகையுமான ரோஜா எம்எல்ஏ, முதல்வர் ஜெகன்மோகனின் பிறந்த நாளை புதுமையாக கொண்டாடும் நோக்கில் இத்திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு நாடெங்கும் நடைபெற்று வரும் நிலையில், நகரி தொகுதியில் பொதுமக்களிடமிருந்து பிளாஸ்டிக்கை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி பொதுமக்கள் எத்தனை கிலோ பிளாஸ்டிக் தருகிறார்களோ அவர்களுக்கு அதே எடையில் அரிசி வழங்கப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்