கேரளாவில் உள்ள கணவரின் வீட்டை தீபங்களால் அலங்கரித்த ரித்திகா.! ரித்திகா வெளியிட்ட அழகிய புகைப்படம்.!

வெளியிட்டது

நடிகை ரித்திகா தற்போது தனது கணவர் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு பல பேர் லைக்குகளை போட்டு வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் முதன் முதலாக ராஜா ராணி நாடகத்தில் கதாநாயகனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர் போராடி வந்தார். பின்னர் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பல ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் ரித்திகா. பாலா உடன் இவர் சேர்ந்து செய்த சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தது.

கேரளாவில் உள்ள கணவரின் வீட்டை தீபங்களால் அலங்கரித்த ரித்திகா.! ரித்திகா வெளியிட்ட அழகிய புகைப்படம்.! 1

இவர் சமீபத்தில் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வினு மலையாளி என்பதால் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எளிமையாக இவருடைய திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் அவரது வரவேற்பு சென்னையில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த திருமண வரவேற்பில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக பாலா, புகழ், ஷகிலா, சிவாங்கி, நிஷா என பல முன்னணி சின்னத்திரை நடிகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரித்திகா வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில் அவர் கேரளாவில் உள்ள தனது கணவர் வீட்டில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரித்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்