இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் புகழ்.! நண்பனை வழியனுப்ப கணவருடன் வந்த ரித்திகா.!

வெளியிட்டது

தற்போது இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் புகழை அவரது நண்பர் ரித்திகா தனது கணவருடன் வந்து வழி அனுப்பி வைத்திருக்கும் வீடியோவை ரித்திகாவே தற்போது வெளியிட்டு இருக்கிறார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புகழ். இவர் சென்னைக்கு வேலை தேடி வெறும் 500 ரூபாயுடன் வந்தவர். பின்னர் வேலை கிடைக்காமல் ஒரு மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்த இவருக்கு, 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அதே டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு கலந்து கொண்டார் புகழ். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் மிகப்பெரிய பிரபலமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் புகழ்.! நண்பனை வழியனுப்ப கணவருடன் வந்த ரித்திகா.! 1

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் புகழ் தற்போது இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றிருக்கும் வீடியோவை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் சபரிமலைக்கு செல்லும் முன்னர் தனது கணவருடன் கோவிலுக்கு சென்ற அவர், புகழை சபரிமலைக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார். அந்த வீடியோவை தற்போது இணையத்தில் ரித்திகா வெளியிட்டு இருக்கிறார். ரித்திகா குக் வித் கோமாளி சீசன் 2வில் வைல்ட் காடு என்ட்ரியாக கலந்து கொண்டார். பின்னர் இவருக்கும் ரசிகர் பட்டாளம் பெருக தொடங்கியது. ரித்திகா தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


ரித்திகா பாலா புகழ் ஆகியோருக்கு இடையே நல்ல நட்பை இருந்து வருகிறது. ரித்திகாவின் திருமண வரவேற்பில் கூட பாலா புகழ் இருவரும் சென்று மேடைகளில் சேட்டை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ரித்திகா மற்றும் புகழின் நட்பை பாராட்டி வருகின்றனர். திருமணமாகி மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்ற ரித்திகா தற்போது மீண்டும் படப்பிடிப்புகளுக்கும் திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் ரித்திகா புகழ் மற்றும் சக்தி இருவரும் சபரிமலைக்கு செல்லும்போது அவர்களுக்காக தனது கணவருடன் வந்து இருக்கும் இந்த வீடியோவுக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்