பாத்து வாடா அம்மு..! பாக்கியலட்சுமி ரித்திகாவை கண்ணுக்குள் வச்சி தாங்கும் கணவர்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா, தற்போது தனது கணவருடன் பொள்ளாச்சியில் விடுமுறையை கழித்து வருகிறார். அந்த க்யூட் வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 ஹீரோவிற்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் தமிழ் ரித்திகா. இவருக்கு அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தபோது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த இவர், பாலாவுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்த காமெடிகளால் மிகப் பிரபலமானார். குறுகிய காலத்திலேயே இவருக்கு பிரபலம் கிடைத்தது. பின்னர் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்ற விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார் ரித்திகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாத்து வாடா அம்மு..! பாக்கியலட்சுமி ரித்திகாவை கண்ணுக்குள் வச்சி தாங்கும் கணவர்.! இதோ வீடியோ.! 1

அமிர்தா கைக் குழந்தையுடன் இருக்கும் ஒரு விதவைப் பெண் ஆவார். இவருக்கும் குறும்படங்களை இயக்கி வந்த எழிலுக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே தனது கணவனை இழந்த அமிர்தா தனது மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட எழிலுக்கு அமிர்தா மீது காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். ஆனால் எழிலின் பாட்டி இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகளை செய்து வைக்க, இறுதியில் பாக்யா எழிலுக்கு அமிர்தாவையே திருமணம் செய்து வைக்கிறார். தற்போது அமிர்தா பாக்கியலட்சுமி வீட்டில் வசித்து வருகிறார். எழிலின் பாட்டி ஈஸ்வரி மற்றும் எழிலின் அண்ணன் செழியன் மட்டும் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களைப் பார்த்தாலே அவர்கள் எரிச்சல் அடைந்து விடுகிறார்கள். இருந்த போதிலும் எப்படியாவது இவர்கள் இருவரையும் மனம் மாற்றும் வேலைகளில் அமிர்தா ஈடுபட்டு வருகிறார். இப்படியாக பாக்கியலட்சுமி சீரியல் கதை நகர்ந்து வருகிறது.


இதற்கு இடையில் ரித்திகாவிற்கு சமீபத்தில் வினு என்பவர் உடன் திருமணம் முடிந்தது. வினுவும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வருபவர் தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. கேரளாவில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சின்னத்திரையை சேர்ந்த பலர் கலந்து கொண்டு இருந்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது கணவருடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் பொள்ளாச்சியில் இருவரும் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குவிந்து வருகிறது..நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்