தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு சினிமாவில் கிடைத்தது. தொடர்ந்து ரெமோ , பைரவா என அடுத்தடுத்து படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்று இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சில காலங்களாக கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவருக்கு வரவேற்புகளை கொடுக்கவில்லை. இதனால் தற்போது பாலிவுட்டில் களம் இறங்கி உள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவையும் ஒரு கலக்கு கலக்குவார் என கூறப்படுகிறது.
இவருக்கு அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இப்படத்தை இயக்குனர் சந்துரு இயக்கி உள்ளார்.சான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : THINK MUSIC INDIA