சீரியலில் இருந்து விலகிட்டேன்.! திடீரென ராஜா ராணி சீரியலை விட்டு விலகி அதிர்ச்சி கொடுத்த சந்தியா.!

வெளியிட்டது

ராஜா ராணி சீரியல் 2வில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த ரியா விஸ்வநாதன் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக அவரே அறிவித்திருக்கிறார். இந்த விலகல் குறித்த காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் திடீரென சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்லியும் இருக்கிறார் ரியா விஸ்வநாதன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி சீசன் 2. இந்தத் தொடர் ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட “என் கணவன் என் தோழன்” என்கிற தொடரை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண் ஒருவர், இனிப்பு கடை நடத்தி வருபவரை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் அவருக்கு மனைவியின் ஆசை தெரிய வருகிறது. மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா? மனைவியை ஐபிஎஸ் ஆக்கினாரா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி சீசன் 2. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீரியலில் இருந்து விலகிட்டேன்.! திடீரென ராஜா ராணி சீரியலை விட்டு விலகி அதிர்ச்சி கொடுத்த சந்தியா.! 1

இந்தத் தொடரில் ஆரம்பத்தில் நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். பின்னர் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இந்த சீரியலை விட்டு விலகினார். அப்போதே பலரும் இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்திவிட்டனர். பின்னர் சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் என்கிற மாடல் நடிக்க ஒப்பந்தமானார். ஆரம்பத்தில் இவரை பலரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தற்போது ரியாவை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆலியா இடத்தை நிரப்ப தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரியா விஸ்வநாதன். கடந்த ஒரு வருடமாக சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் நடித்து வருகிறார். தற்போது பல தடைகளை மீறி ஐபிஎஸ் ஆகியிருக்கிறார் ரியா. ஐபிஎஸ் ட்ரைனிங் முடித்து அதிலும் வெற்றி பெற்று, தற்போது அவரது சொந்த ஊரிலேயே போஸ்டிங் வாங்கும் அளவிற்கு சந்தியா வந்திருப்பது போல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரியா விஸ்வநாதன், ராஜா ராணி சீரியல் இருந்து விலகி விட்டதாக அறிவித்திருக்கிறார்.


அவர் கூறியுள்ளதாவது, இந்த ஒரு வருடத்தில் நான் ராஜா ராணி 2 வில் நடித்துக் கொண்டிருந்தபோது அது குறித்து எந்த விதமான வீடியோவும் போடவில்லை. தற்போது முதல் முறையாக ஒரு வீடியோ போடுகிறேன். இனிமேல் நான் ராஜா ராணி 2 வில் இல்லை, அந்த கதையில் வேறு ஒருவர் சந்தியாவாக நடிக்கிறார். புது சந்தியாவுக்கு நீங்கள் ஆதரவு கொடுங்கள். நீங்கள் இத்தனை நாள் எனக்கு கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, எங்கு சென்றாலும் சந்தியா சந்தியா என்று எனக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை தருகிறது. நான் என்னுடைய 200 சதவீத உழைப்பை கொடுத்தேன் என்று பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவிற்கு கீழே நன்றாக தானே சென்று கொண்டிருந்தது ஏன் திடீரென விலகினீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ரியாவோ எந்தவிதமான விளக்கத்தையும் கொடுக்காமல் நன்றி மட்டும் சொல்லி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்