Rj’வாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய நடிகர் Rj பாலாஜி தொடர்ந்து படங்களில் அறிமுகமாகி இப்பொது நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அரிசியால், சமூகம், பெண்கள் என எந்த விஷயத்தை பற்றியெல்லாம் பெரிய நடிகர் நாசுக்காக தங்களுடைய படங்களில் சொல்வார்களோ அதையே அழுத்தம் திருத்தமாக தன்னுடைய படங்களில் பதிவு செய்து செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், இப்பொது வீட்ல வேஷசங்க” என தொடர்ந்து நாயகனாக உருமாறி திரை உலகில் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகனாக வந்த இவர் இப்பொது நாயகன் அந்தஸ்த்துடன் வளம் வருகிறார். தானே திரைக்கதை எழுதி தான் நண்பர்களுடன் இணைந்து படத்தை இயக்கி, வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக முக்குத்தி அம்மன் படம் இவரை ஒரு நல்ல குடும்ப படம் கொடுக்கும் நடிகராக மட்டுமின்றி, படக்குழுவாகவே மக்கள் பார்க்க துவங்கியுள்ளனர். இப்போது ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, கே.பி.ஏ.சி.லலிதா, யோகிபாபு, புகழ் என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வீட்ல விஷேசங்க”. கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.
ஹிந்தியில் வெளியான “பதாய் ஹோ” என்ற வெற்றி படத்தின் ரீமேகாக உருவாகும் இந்த படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குடும்பங்கள் பார்க்கும் படமாக இந்த படம் அமைந்துள்ளது. எந்தவித முகசுழிக்கும் படியான காட்சிகளும் இன்றி படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் கொடுத்து வருகிறது.
பலரும் அவரை பாராட்டி வரும் நிலையில், எப்போதும் போல நம் ப்ளூ சட்டை மாறன், மோசமான விமர்சனத்தையே கொடுத்துளளார். இது சில தினங்கள் வைரல் ஆனது. ஆனால் இது படத்தின் வசூலை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது உண்மை. இருந்தாலும் இதுக்கு பதிலடிகொடுக்க நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், படத்தை குறித்து பாராட்டி பேசியுள்ள திரை அரங்கு உரிமையாளர்கள், விடியோவை பகிர்ந்து மாறனை போலவே பேசி, “நான் எந்த ப்ளூ சட்டைக்கு படம் எடுக்கவில்லை, மக்களுக்காக தான் எடுத்துள்ளேன், அவர்கள் அதனை புரிந்து கொண்டுள்ளார்கள்.” என பேசி அந்த விடீயோவை பகிர்ந்துள்ளார். அந்த விடியோவை நீங்களும் காண…
Video Courtesy – Thandoravoice