தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 2.5 கி.மீட்டர்களுக்கும் சாலை மரணங்கள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை மரணங்கள் குறித்து தேசிய குற்ற பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் மொத்த நாட்டில் 50,771 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது.

அதேபோல், இதுவரை மொத்தமாக 4.12 இலட்ச மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றுள் வெறும் 6,891 மரணங்களே இயற்கை நிகழ்வுகளால் நடந்துள்ளன. இரயில் விபத்து போன்ற இயற்கை அல்லாத மரணங்கள் 44 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது அதன் எண்ணிக்கை 1.78 இலட்சமாக இருக்கிறது. இதில் சாலை விபத்தின் மரண எண்ணிக்கை 1.53 இலட்சமாக இருக்கிறது.
சாலை மரணங்களுக்கு காரணங்களாக அதிவேகம் குறிப்பிடப்படுகிறது. அதே போல, இரயில்வே மரணங்கள் எனும் போது, இரயிலிருந்து விழுவது, தடம் கவிழ்வது போன்றவை சொல்லப்படுகிறது. இது போன்ற இரயில் மரணத்தில் 16,702 பேர் பலியாகியுள்ளனர்.
மற்றோருபுறம், சாலை விபத்துகளை பொறுத்தவரை “இடித்துவிட்டு தப்பித்து ஓடுவது” போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இது போன்ற 47,028 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2017ஆம் ஆண்டில் 43,727ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.