வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ராபர்ட் மாஸ்டர்.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6 தற்போது 51வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளைப் பெற்று வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். வெளியேறிய பின்னர் அவர் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஒரு முக்கிய நபரை சென்று நேரில் சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 21 போட்டியாளர்களுடன் மிக கோலாகலமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்களே தொடர்கின்றனர். மொத்தம் ஏழு போட்டியாளர்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேறி இருக்கின்றனர். ஜி.பி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி என மொத்தம் ஏழு பேர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ராபர்ட் மாஸ்டர்.! 1
கடந்த வாரம் நடந்த நாமினேஷன் பிராசஸில் ராபர்ட் மாஸ்டர் முக்கிய இடத்தில் இருந்தார். அவர் வீட்டில் சரியாக விளையாடுவதே கிடையாது, ஒரு சேரில் அமர்ந்து கொண்டு பார்வையாளர் போல் இருக்கிறார் என்று வீட்டில் உள்ள அனைவரும் நேற்று கமல் முன்பே குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவார் என்று பலரும் எண்ணியிருந்த நிலையில், அதே போல் ராபர்ட் மாஸ்டர் நேற்று வெளியேறியிருக்கிறார். வீட்டில் இருந்தபோது தனக்கு தந்தை ஞாபகம் வந்து விட்டதாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து தந்தையின் ஞாபகத்தால் அவதிப்படுவதால் என்னால் சரியாக விளையாட முடியவில்லை என்றும் அவர் கமல் முன்பாக கூறியிருந்தார்.

மேலும் ரக்ஷிதா திருமணமானவர் என்று தெரிந்தும் அவர் ரட்சிதாவின் மீது காதல் இருப்பது போலவும் சுற்றி வந்தார். இது பலருக்கும் இது விரும்பத்தகாத நிகழ்வாக இருந்தது. இருப்பினும் ரட்சிதாவும் ராபர்ட் மாஸ்டரும் இணைந்து செய்யும் சின்ன சின்ன குறும்புகள் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. பலரும் அந்த சிறிய வீடியோக்களை எடுத்து பின்னணியில் காதல் பாடல்களை சேர்த்து மீம்ஸாக பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் இன்று வெளியேறியிருக்கிறார். அவர் வெளியேறிய பின்பு முதல் முறையாக அசன் கோளாறை சென்று சந்தித்திருக்கிறார். பின்னர் வீட்டிற்கு சென்ற அவர் தனது தாய் தந்தையை சந்தித்து இருக்கிறார். அவரை அவரது தாயும் தந்தையும் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்