Categories: Bigg Boss Tamil 6

ராபர்ட் மாஸ்டர் சொன்ன கதை எல்லாம் பொய்யா? ஆதாரத்துடன் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் தன் மகளை ஏழு வயதாக இருக்கும்போது பார்த்தேன், அதன் பின்னர் அவரை பார்க்கவே இல்லை, ஒரு முறை பார்த்த போது என்னை என் மகள் அங்கிள் என அழைத்தார் என்று கதை சொல்லும் டாஸ்க்கில் கூறியிருந்தார். இது பலரின் நெஞ்சையும் உலுக்கி இருந்தது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் இன்ஸ்டாகிராமில் முன்பு ஒருமுறை அவரது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த பழைய புகைப்படத்தை எடுத்த நெட்டிசன்கள், அப்போ பிக்பாஸ்ஸில் சொன்ன கதை எல்லாம் பொய்யா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ராபர்ட் மாஸ்டரை நடன இயக்குனராக பலருக்கும் தெரியும். அது மட்டும் இல்லாமல் சீசன் 3ல் கலந்து கொண்டுள்ள வனிதா உடன் சில காலம் திருமணம் ஆகாமலேயே வாழ்ந்து வந்தார் ராபர்ட். வனிதாவுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்திருக்கிறார்.

ராபர்ட் மாஸ்டர் சொன்ன கதை எல்லாம் பொய்யா? ஆதாரத்துடன் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.! 1

தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார் ராபர்ட் மாஸ்டர். இது குறித்து வனிதாவிடம் கேட்கப்பட்ட போது ராபர்ட் என்ன என் புருஷனா, இல்லை காதலனா, நான் அவனின் பெயரை ஒரு பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக் கொண்டேன் என்று கேஷுவலாக பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் பிக்பாஸில் கதை சொல்லும் டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய ராபர்ட் மாஸ்டர், தான் படிக்காதவன் என்கிற காரணத்தினால் தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர் சென்ற பொழுது என் குழந்தை கை குழந்தையாக இருந்தது. இரண்டு வயது வரை அந்த குழந்தையை நான் நேரில் பார்த்தேன், அதன் பின்பு பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டதாக கூறினார்.

பின்பு ஒரு நாள் தனது தாயுடன் அவர் வண்டியில் வந்தார். அப்போது அவருக்கு ஏழு வயது இருக்கும், அங்கிளுக்கு ஹாய் சொல்லு என்று தனது மனைவி சொன்ன பின்பு, தனது குழந்தை தன்னை அங்கிள் என்று அழைத்தது. அது எனக்கு மிகவும் வலித்தது, என் குழந்தைக்கு நான்தான் அப்பா என்று தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. நான் இறந்த பிறகாவது அந்த குழந்தையிடம் நான் தான் அப்பா என்று சொல்லுங்கள். இதற்காகத்தான் நான் இந்த பிக்பாஸிற்கே வந்தேன் என்று கூறி கதறி அழுதார். அவரின் இந்த பேச்சு பலரையும் உலுக்கியிருந்தது. இந்த கதை பலரையும் நெகிழ வைத்தது இந்த நிலையில் instagram-ல் என் மகள் என்று ராபர்ட் மாஸ்டர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 7 வயது வரை மட்டும்தான் பார்த்தேன் என்று பிக்பாஸில் சொன்ன கதை எல்லாம் பொய்யா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ஆனால் அது உண்மையிலேயே அவரது மகள் தானா? அல்லது உறவினர் நண்பரின் மகளை தன் மகள் என்று அவர் பதவிட்டு இருந்தாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் நெட்டிசன்கள் தொடர்ந்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்