படிக்காதவன் என்று சொல்லி பிரிந்து சென்ற மனைவி, கண்ணீர் விட்டு கதறி அழுத ராபர்ட் மாஸ்டர்

வெளியிட்டது

நான் பெற்ற மகளுக்கு என்னை யார் என்றே தெரியாது, ஒருமுறை ரோட்டில் வைத்து பார்த்தபோது தன்னை அங்கிள் என நான் பெற்ற மகளே என்னை அழைத்தார் என்று ராபர்ட் மாஸ்டர் தனது கதையை பிக்பாஸில் கூறியிருக்கிறார். அப்போது அவர் மனம் உடைந்து அழுதார். நடன இயக்குனர்களில் குறிப்பிடத் தகுந்த நபராக இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். இவர் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தற்போது வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் படங்களில் இருந்து விலகி தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக பிக்பாஸ் அவரை உள்ளே அனுப்பியது. பிக்பாஸ்க்கு உள்ளே சென்ற பலரும் வெளியில் வந்த பின்பு பல படங்களில் கமிட்டாகி வருகின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டரை உள்ளே அனுப்பியிருந்தது பிக்பாஸ்.

படிக்காதவன் என்று சொல்லி பிரிந்து சென்ற மனைவி, கண்ணீர் விட்டு கதறி அழுத ராபர்ட் மாஸ்டர் 1

ராபர்ட் மாஸ்டருக்கும் வனிதாவிற்கும் சில காலமாக காதல் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர். பின்பு சில காரணங்களால் ராபர்ட் மாஸ்டரை பிரிந்து, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. பின்னர் அவருடனும் அவருக்கு விவாகரத்தானது. ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்திருக்கின்றனர். வனிதா ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3யில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில், தற்போது ராபர்ட் மாஸ்டர் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக உள்ளே வந்திருக்கிறார். தற்போது பிக்பாஸில் கதை சொல்லும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ராபர்ட் மாஸ்டர் தனது வாழ்க்கையில் நடந்த கதைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், இருவருக்கும் விவாகரத்தானது.

சிறு வயதிலேயே போலியோ அட்டாக் ஆனதால் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் இருந்துள்ளது. பின்பு ராபர்ட் மாஸ்டரின் தந்தையின் முயற்சியால் அவர் நடந்துள்ளார். பின்பு அவர் டான்ஸ் மாஸ்டர் ஆகும் அளவிற்கு முயற்சி செய்து உயர்ந்திருக்கிறார். அவருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அந்த பெண்ணின் பெயரை அவர் சொல்ல விரும்பவில்லை. பின்பு படிக்காத காரணத்தினால், இவருக்கு படிப்பு இல்லை என்று அந்த பெண் இவரிடம் இருந்து விலகி இருக்கிறார். அப்போது அவர்களுக்கு ஒரு குழந்தையின் இருந்துள்ளது. அந்தக் குழந்தை பற்றி பேசிய ராபர்ட் மாஸ்டர், என் மகளுக்கு நான்தான் அப்பாவா என்று தெரியுமா தெரியாதா என்று கூட எனக்கு தெரியாது, என் முதல் மனைவி இன்னொரு திருமணம் செய்து கொண்டார், என் மகளுக்கு நான்தான் அப்பா என்று நான் இறந்த பிறகாவது சொல்லுங்கள்.

நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த காரணமே இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்பாவது இவர்தான் என்னுடைய அப்பா என்பதை என் மகள் தெரிந்து கொள்வார், அதற்காக தான் இந்த ஷோவுக்கு வந்தேன், இரண்டு வயது வரை குழந்தை பார்த்திருக்கிறேன், ஒரு நாள் குழந்தைக்கு ஏழு வயதாக இருக்கும் பொழுது அவருடைய தாய் அவரை வண்டியில் அழைத்து வந்தார். அப்போது என்னை பார்த்து அங்கிளுக்கு ஹாய் சொல்லு என்று சொல்ல, எனது மகளும் என்னை அங்கிள் என்று கூறிவிட்டுப் போனார். இதெல்லாம் எனக்கு மிகப்பெரிய வலியாக இருக்கிறது என்று சொல்லி ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கி அழுதார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்