ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.! புகைப்படங்கள் இதோ

வெளியிட்டது

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அவரது மாமாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.! புகைப்படங்கள் இதோ 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் ‘சிரிச்சா போச்சு’ என்ற சுற்று மூலமாக தனது மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தி பல மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் ரோபோ சங்கர். பின்னர் இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது மிமிக்ரி திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அதன் பின்னர் பல படங்களில் நடித்திருக்கும் ரோபோ சங்கருக்கு 2013ம் ஆண்டு வெளியான ‘யாருடா மகேஷ்’ திருப்புமுனையை கொடுத்தது. அதன் பின்னர் இவர் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வாயை மூடி பேசவும்’, ‘கப்பல்’, ‘மாரி’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘இரும்புத்திரை’, ‘கலகலப்பு 2’, ‘விசுவாசம்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இந்த ஆண்டு ஆண்டு வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

அதிக குடியால் மஞ்சள் காமாலை வந்து உடல் எடை மெலிந்து மிக ஒல்லியாக இருந்தார் ரோபோ சங்கர். தற்போது உடல்நலம் தேறி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகள் இந்திரஜா சங்கருக்கும் அவரது முறை மாமனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்திரஜா ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான ‘சர்வைவர்; நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கிறார்.

தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மாள் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் ‘விருமன்’ படத்தில் நடிகை அதிதி சங்கருக்கு தோழியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் அவர் தனது முறை மாமனான கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் இன்று அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்திரஜாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்