மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த ரோபோ ஷங்கர்.! குடும்பத்துடன் குத்தாட்டம்.!

வெளியிட்டது

ரோபோ சங்கர் தனது மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து நடனமாடி இருக்கும் வீடியோ தற்போதைய இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டு வந்திருக்கும் ரோபோ சங்கர் தற்போது பழையபடி மாறி இருக்கிறார். அந்த வீடியோவுக்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை காட்டி இன்று முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜயகாந்த் போன்று பேசுவதில் திறமையாளராக இருந்தார். அது மட்டும் இல்லாமல் பல நடிகர்கள் போல பல குரலில் பேசி மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருந்தார். பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், கப்பல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த ரோபோ ஷங்கர்.! குடும்பத்துடன் குத்தாட்டம்.! 1
Kasthuri, Meera Mitun, Robo Shankar And Others At The Humanitarian Awards Ceremony

ஆரம்பத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் பின்னர் படங்களில் குழுவாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் தற்போது தனியாக காமெடி செய்யும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான இரவின் நிழல், கோப்ரா, தி லெஜெண்ட், தமிழரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் படங்களில் பின்னணியும் பேசி வருகிறார்.்லயன் கிங் படத்தில் இவர் பும்பாவிற்கு பின்னணி பேசியதால் குழந்தைகளுக்குப் பிடித்த நபராகவும் மாறிப்போயிருந்தார். இவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மனைவியும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் இந்திரஜாவும் படங்களில் நடித்து வருகிறார். பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்திரஜாவும் ரோபோ சங்கரும் இணைந்து நடனமாடி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோக்களுக்கு லைக்குகளும் பார்வையாளர்களும் அள்ளுவது வழக்கமாக இருக்கிறது. 

சில காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை மிகவும் குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் ரோபோ சங்கர். தற்போது அவர் அந்த நோயின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார். தற்போது மீண்டும் தனது மகளுடன் இணைந்து நடனமாடி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து அவர் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்