முடிவுக்கு வந்தது ரோஜா சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து லீக்கான புகைப்படம்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று ரோஜா சீரியல் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதை முன்னிட்டு அதன் ஹீரோ சிபு சூரியன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார். அதேபோல் ஹீரோயின் பிரியங்கா நல்காரியும் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டங்கள் இருக்கிறது. குறிப்பாக ரோஜா சீரியல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறது. இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூரியனும், ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரியும், வில்லியாக அனு கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயாவும் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் வடிவுக்கரசி, மெட்டி ஒலி புகழ் காயத்ரி போன்ற பல முன்னணி கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

முடிவுக்கு வந்தது ரோஜா சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து லீக்கான புகைப்படம்.! 1
இந்த சீரியலில் அர்ஜுன் ரோஜாவுக்கு நடுவில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவும், கோர்ட்டில் நடக்கும் வழக்கு காட்சிகளுக்காவும் இந்த சீரியல் பிரபலமானது. இல்லத்தரசிகள் எந்த அளவிற்கு இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்களோ, அதே அளவிற்கு இளைஞர் பட்டாளமும் இந்த சீரியலை விரும்பி பார்த்துக் கொண்டிருந்தது. சமீபகாலமாகவே ரோஜா சீரியல் விரைவில் முடிவடையும் என்ற செய்தி பரவிக்கொண்டிருந்தது. நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியல், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இன்று இறுதி கட்ட படப்பிடிப்புகள் எடுக்கப்படும் நிலையில் சிபு சூரியன் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். நான்கு ஆண்டுகளாக அழகான நினைவுகளுடன், அழகான பயணம் இன்றுடன் நிறைவடைகிறது எனக்கு வாய்ப்பை கொடுத்த சரிகமாவுக்கும் சன் டிவிக்கும் மிக்க நன்றி.


என் மீது அளவில்லாத அன்பையும் ஆதரவையும் பொழிந்த ரசிகர்களுக்கும் நன்றி. உங்களை மீண்டும் விரைவில் சந்திக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். அதேபோல இந்த சீரியலின் ஹீரோயினான பிரியங்காவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் என் வாழ்க்கையில் இந்த நான்கு ஆண்டுகளை மறக்க முடியாது, ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாமல் இங்கு வந்த என்னை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப் பெண்ணாக ஏற்றுக் கொண்டீர்கள். இந்த நான்கு ஆண்டுகளில் நிறைய லவ் மற்றும் அன்பை என் மீது பொழிந்தீர்கள் உங்கள் அன்புக்காக நான் திருப்பி என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியவில்லை. ஆனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சன் டிவி மற்றும் சரிகம நிறுவனத்திற்கு நன்றி.


நிறைய நல்ல ஞாபகங்களுடன் நிறைய நல்ல உள்ளங்களின் அன்புகளுடன் ஆசீர்வாதங்களுடன் ரோஜா சீரியலில் இருந்து விடைபெறுகிறேன். இது முடிவில்லை இன்னொரு புதிய தொடக்கம் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன் என்றும் அன்புடன் பிரியங்கா நல்காரி என்று பதிவிட்டுள்ளார். ரோஜா சீரியல் முடிவடைவதால் இந்த சீரியலின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்