Categories: சினிமா

மகனின் 17-வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகை ரோஜா.! புகைப்பட தொகுப்பு இதோ.!

வெளியிட்டது

நடிகை ரோஜா தற்போது தனது மகனின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.

மகனின் 17-வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகை ரோஜா.! புகைப்பட தொகுப்பு இதோ.! 1

அந்த புகைப்படங்களை தற்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்கள் குவிந்து வருகிறது்


90களில் தமிழில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரோஜா. தெலுங்கில் அறிமுகமான இவருக்கு முதல் படமே தோல்வியை கொடுத்தது.

பின்னர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி என்கிற படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.


தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார்.

தனது முதல் படமான செம்பருத்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவருக்கும் அதன் இயக்குனர் செல்வமணிக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.


இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான கில்லாடி, புலன் விசாரணை, என் வழி தனி வழி ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்பு இவர் திரைத்துறையில் இருந்து முழுவதுமாக விலகி தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த அவர், அந்த கட்சியில் இருந்து விலகி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். சமீபத்தில் அவர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவியேற்றார்.


நடிகை, அரசியல்வாதி, தயாரிப்பாளர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முக திறமையாளராக வலம் வரும் நடிகை ரோஜாவின் மகனின் பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டிருக்கிறது.

மகன் கௌசிக்கின் 17வது பிறந்தநாளை நடிகை ரோஜா பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார். இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


ரோஜாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று பலரும் அந்த புகைப்படங்களை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

பலரும் ரோஜா செல்வமணி தம்பதியரின் மகன் கௌஷிக்கிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்