Categories: சினிமா

விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்ற ரோஷினி ஹரிப்ரியன்.? கார்திக்குடன் புது சீரியலில் கமிட்

வெளியிட்டது

பாரதி கண்ணம்மாவில் ஆரம்பத்தில் கண்ணம்மாவாக நடித்துக் கொண்டிருந்த ரோஷ்ணி தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி உள்ளார் என்கிற செய்தி தீயாக பரவி வருகிறது. விரைவில் அவர் கார்த்திக் ராஜுடன் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் கமிட்டாக உள்ளதாகவும் அதற்கான ப்ரோமோ விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வழியாக இருக்கிறது. விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடர் பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தி விட்டது. 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ஐந்து ஆண்டுகளை கடந்த பின்னரும் அரைத்த மாவையே அரைத்து வருவதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். நாடகத்தை முடிக்குமாறு இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்ற ரோஷினி ஹரிப்ரியன்.? கார்திக்குடன் புது சீரியலில் கமிட் 1

ஆரம்பத்தில் இந்த நாடகத்தில் கண்ணம்மாவாக நடித்துக் கொண்டிருந்தவர் ரோஷினி ஹரிப்பிரியன். கருப்பாக இருக்கும் மருமகளை ஏற்றுக் கொள்ளாத மாமியார் என்கிற ரீதியில் தான் கதை ஆரம்பித்தது. ஐந்தாண்டுகளுக்கு பின்பு இந்த கதையை எங்கெங்கயோ இழுத்துக் கொண்டு சென்று விட்டனர். கண்ணம்மாவிற்கு பிறந்தது தன் குழந்தைகள் இல்லை என்று பாரதி அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்கு சென்று விட்டனர். ஆனாலும் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் காலத்தை தாழ்த்தி வருகிறார். ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் இந்த கதை முடிந்து விடும். ஆனால் இதை இயக்குனர் அதை செய்யாமல் வளவளவென்று இழுத்தடித்து வருகிறார். இதனால் பலரும் இந்த சீரியலையே பார்ப்பதை நிறுத்தி இருந்தனர்.

குறிப்பாக ரோஷினி ஹரிப்பிரியன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அப்போதே இந்த சீரியலின் டிஆர்பி அடிவாங்க தொடங்கி இருந்தது. பின்பு கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் நடித்து வந்தார். சமீப காலமாக கதையின் போக்கு சரியில்லாததால் இதன் டிஆர்பி ரேட்டிங்கில் மிகுந்த அடி வாங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது ரோஷினி ஹரிப்பிரியன் விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றுவிட்டதாக தகவல் பரவி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் செம்பருத்தி சீரியல் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் ராஜுடன் இணைந்து புதிய நாடகத்தில் கமிட்டாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவலை ரோஷ்ணி ஹரிப் பிரியா இன்று வரை மறுக்கவில்லை.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்