நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் ஜித்தன் ரமேஷ் நடித்திருக்கும் ‘ரூட் நம்பர் 17’ என்கிற படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ‘ஜித்தன்’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ரமேஷ். பிரபல நடிகர் ஜீவாவின் சகோதரரான, இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதன் பின்னர் இவருக்கு பெரிய அளவில் படங்கள் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது இவர் நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளைப் பெற்ற ‘தாய் நிலம்’ என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக அஞ்சு பாண்டியா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் அருவி மதன், அமர் ராமச்சந்திரன், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, நிஹால், கார்த்திக் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். பிரபல மலையாள இசை அமைப்பாளராக இருக்கும் அவ்வசப்பன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. திகில் காட்சிகள் நிறைந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பேயாக ஜித்தன் ரமேஷ் இந்த படத்தில் மிரட்டி எடுத்திருக்கிறார்.
காட்டுக்குள் தனியாக இருப்பதற்காக செல்லும் ஜோடி ஒன்றுக்கு அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. அவர்கள் அதிலிருந்து தப்பித்தார்களா? இல்லையா? ஜித்தன் ரமேஷ் பேயாக அவருக்கு உதவினாரா? என்ற பல திருப்புமுனைகளுடன் இந்த ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Ayngaran